நான் வைஸ்ராயாக இருந்தால்...

ஸிம்லாவில், ஹிமாலய மலையின் இயற்கை வளமும் வானும் மிகவும் சிறப்பு வாய்ந்த சூழ்நிலையில் மிகவும் சந்தோஷமாகவும்
நான் வைஸ்ராயாக இருந்தால்...

ஸிம்லாவில், ஹிமாலய மலையின் இயற்கை வளமும் வானும் மிகவும் சிறப்பு வாய்ந்த சூழ்நிலையில் மிகவும் சந்தோஷமாகவும் அமைதியாகவும் ஒரு சாதாரண பாயின் மேல் காந்திஜி வீற்றிருந்தார். அப்போது அங்கு வந்த நிருபர், காந்திஜிக்கு நமஸ்காரம் செய்தார். காந்திஜி கூறியதாவது: வாருங்கள். உங்களுக்கு பேட்டியளிக்க வேண்டியதுதான். ஆனால் சொல்வதற்கு ஒன்றுமில்லையே! இந்த வேளையில் நான் பேசுவதில்லை. ஆனால் உங்கள் விஷயத்தில் எனது நியமத்தை சற்று தளர்த்துகிறேன். ஆனால் கேள்விகளை நீங்கள் தான் போட வேண்டும். 
சந்தர்ப்பம் எப்போது கிடைக்குமென்று காத்துக் கொண்டிருந்த  நிருபர் கேட்டதாவது:- தங்கள் சொந்த இஷ்டத்துக்கு விட்டு விட்டால் தாங்கள் எவ்விதம் இடைக்கால சர்க்காரை அமைப்பீர்கள்? 
சிரித்துக் கொண்டே காந்திஜி சொன்னார்:-
ஜாதி, மத பேதமின்றி மேதாவிகளையே இடைக்கால சர்க்காரில் சேர்த்துக் கொள்வேன். நான் வைஸ்ராயாக இருந்தால் நிர்வாக சபையினரின் ஜாபிதாவை சமர்ப்பித்து உலகத்தினரை திடுக்கிடச் செய்வேன்; அதை உலகம் ஏற்கும்படி செய்வேன். என்னை வைஸ்ராயாக யாரும் நியமிக்கப் போவதில்லை. காங்கிரஸின் அக்ராசனராகவும் நான் தேர்ந்தெடுக்கப்படப் போவதில்லை. ஏனெனில் நான் காங்கிரஸில் நாலணா சந்தாதாரர் கூட அல்ல.
இந்தியாவின் சுதந்திரத்தைத் துரிதப்படுத்துவதிலும் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் யாராவது ஒரு அதிக திறமைசாலி அகப்பட்டால் காங்கிரஸில் ஏற்கனவே இருப்பவர் ஒருவரை தள்ளிவிட்டு அப்பேர்ப்பட்ட ஒருவரை நிர்வாக சபையில் சேர்த்துக்கொள்ள நான் சிறிதும் தயங்க மாட்டேன்.

தினமணி (01-07-1945)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com