சிறை செல்வது பதவிக்கு அனுமதிச் சீட்டல்ல!
By DIN | Published On : 24th January 2019 01:28 AM | Last Updated : 24th January 2019 01:28 AM | அ+அ அ- |

உண்மையான ஆபத்து என்ற மகுடத்தின் கீழ் மகாத்மா காந்தி பின்வருமாறு எழுதியுள்ளார்:
உள்ளுக்குள் இருக்கும் அபாயத்தை எடுத்துக் காட்டுவதுதான் இங்கு என்னுடைய நோக்கம்.
முதலாவதாயுள்ள முக்கியமான அபாயம் மனதையும் உடலையும் பற்றியுள்ள சோம்பேறித்தனம். சிறைத் தண்டனை அனுபவித்தபின் சுதந்திரத்தைப் பெற வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை என்ற போலி திருப்தியினாலேயே இந்த சோம்பேறித்தனம் ஏற்படுகிறது. சிறைவாசம் அனுபவித்ததற்காக ஸ்தாபனம் நன்றியறிதலுடன், தேர்தல், பதவிகள் விஷயத்தில் தங்களுக்கு முதல் சலுகை காட்டி தங்கள் சேவைக்கு வெகுமானம் அளிக்கவேண்டுமென நினைத்துவிடுகிறார்கள்.
ஆகையால் பரிசுப் பதவிகளைப் பெற கேவலமான போட்டிகள் ஏற்படுகின்றன. உண்மையில் இது முட்டாள்தன
மாகும். காங்கிரஸ் அகராதியில் பரிசு என்று எதையும் கருதக்கூடாது.
சிறைத் தண்டனையே அதன் பிரதிப்பிரயோசனம். ஒரு ஸத்யாக்ரஹியின் பூர்வாங்கப் பரிட்சை இது. அதன் லக்ஷியம் மாசற்ற ஆட்டுக் குட்டியின் பலிபீடம் போன்றது. இதற்குப் பதிலாக, காங்கிரஸுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு பதவிக்கும் சிறைவாசம் ஒரு அனுமதிச் சீட்டாக உபயோகிக்கப்படுகின்றது.
இப்படிச் செய்தால் ஒரு ஸத்யாக்ரஹியின் சிறை
வாசம் திருட்டையும், கொள்ளைகளையுமே தொழிலாகக் கொண்டவர்களைப் போல கேவலமான ஒரு தொழிலாகிவிடக் கூடும்.
தினமணி (14-07-1946)