ஈறுகளில் ரத்தக் கசிவா?

பல் வலி, பல் சொத்தை, பல்லைப் பிடுங்குதல் போன்ற பிரச்னைகளைத்தான் முக்கியமாகக் கவனிக்கிறோம்.  பற்களைத் தாங்கி பாதுகாக்கும் ஈறுகளைக் கவனிப்பதில்லை. ஈறுகளில் ரத்தம் வடிவது ஒரு முக்கிய பிரச்னையாகும். முறைய

பல் வலி, பல் சொத்தை, பல்லைப் பிடுங்குதல் போன்ற பிரச்னைகளைத்தான் முக்கியமாகக் கவனிக்கிறோம்.

 பற்களைத் தாங்கி பாதுகாக்கும் ஈறுகளைக் கவனிப்பதில்லை. ஈறுகளில் ரத்தம் வடிவது ஒரு முக்கிய பிரச்னையாகும். முறையாக பல் துலக்காமல் இருப்பதுதான் இதற்குக் காரணம்.

 நாம் சாப்பிடும் உணவின் துணுக்குகள் பல்லின் அடியில், ஈறுகளில் விளிம்பில் படிந்து அகற்றப்படாதபோது, ஈறுகள் சிவந்து வீக்கம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாகிறது.

  பின்னர் காரை பிடித்து ஈறு பகுதியில் ரத்தம் வடியச் செய்கிறது. இன்னும் நாள்பட்ட நிலையில் தாடை எலும்பு நோய்க்கும் வழி கோலுகிறது. இறுதியில்

பற்களை இழக்க நேரிடலாம்.

  ஈறுகளில் ரத்தம் கசிவதற்கான காரணங்கள்: முறையாக பல் துலக்காதது, கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாற்றங்கள், சீரற்ற பல் வரிசை, சரியாய் வாய் கொப்பளிக்காதது, ரத்தப் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் காரணமாக ஈறுகளில் ரத்தம் கசியும் பிரச்னை ஏற்படக்கூடும்.

  ஈறுகளில் ரத்தம் வடிதல் என்பது மொத்த பல் அமைப்பையே சீர்குலைக்கும் செயலின் ஆரம்பம். வாயில் உள்ள பாக்டீரியாக்கள் முதலில் ஈறுகளை வீங்கச் செய்து, பற்களைத் தாங்கிப் பிடிக்கும் திசுக்களைச் சிதைக்கின்றன.

  பின்னர் இவை பற்காரைகளாக மாறி ஈறுகளில் அரிப்பை உண்டாக்கி ரத்தம் கசியச் செய்கிறது. கவனிக்கப்படாமல் விடும் இந்த நிலைதான் பின்னர் தாடை எலும்பு நோய்க்கு காரணமாகிறது. பல்லை இழக்கும் நோய்க்கும் காரணமாகிறது. பல்லை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

சிகிச்சை: ஈறுகளில் ரத்தக் கசிவை நிறுத்த மேற்கொள்ளும் முதல் சிகிச்சை ஸ்கேலிங் எனப்படும். இது பல் இடுக்குகளில் சிக்கியுள்ள உணவுத் துணுக்குகளையும், வாயில் உள்ள பாக்டீரியாக்களையும் அகற்ற பல் சிகிச்சை நிபுணர் மேற்கொள்ளும் சிகிச்சையாகும்.

 இதற்குப் பிறகும் ரத்தம் கசிவது நிற்கவில்லையென்றால் தீவிர மருத்துவ மற்றும் பல் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு காரணங்களை ஆராய்ந்து சிகிச்சை பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com