சுடச்சுட

  

  வாரத்தில் இரண்டு நாட்கள் பூண்டை பச்சையாக சாப்பிட்டால், நுரையீரல் புற்றுநோயில்  இருந்து தப்பிக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டு வந்த ஆய்வில், தங்களது உணவில் அவ்வப்போது பச்சையாக பூண்டை சாப்பிடும் வழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது 44 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  புகைப்பிடிப்பவர்களை அதிகம் தாக்கும் நுரையீரல் புற்றுநோய் பல நாடுகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. புகைப் பிடிக்காதவர்களுக்கும், தற்போதுள்ள சுற்றுச்சூழல் மாசு காரணமாக நுரையீரல் புற்றுநோய் ஏற்படுகிறது.

  எனவே, நமது உணவில் வாரத்தில் இரண்டு நாட்கள் பச்சைப் பூண்டை சாப்பிடுவது நுரையீரல் புற்றுநோயில் இருந்து தற்காத்துக் கொள்ள வழியாக இருக்கும் என்று கூறுகிறார்கள்.

  புகை மண்டலத்தில் பணியாற்றுவோர், சுற்றுச்சூழல் மாசடைந்த பகுதிகளில்  உள்ளவர்கள் இதனை கடைபிடிக்கலாம்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai