சுடச்சுட

    
    dream

    உறங்கும் போது குறட்டை விடுவது சிலருக்கு ஏற்படுவது வழக்கம். ஆனால், அது அவர்களுக்கு தொல்லையாக இருக்கிறதோ இல்லையோ, அவர்களுடன் இருப்பவர்களுக்கு மிகுந்த அவஸ்தையாகிவிடுவதுண்டு.

    இரவு முழுவதும் நன்றாக தூங்கியும், காலையில் உடம்பு களைப்பாக இருக்கிறதா, தூங்க வேண்டும் போல இருக்கிறதா அப்படியானால் நீங்கள் இரவில் குறட்டை விடுகிறீர்களா என்று கேட்டறிந்து கொள்ளுங்கள்.

    ஆம் என்றால், உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது  அவசியம்.

    குறட்டை என்பது சாதாரண விஷயம் அல்ல. அது உடலில் ஏற்படும் ஏதேனும் அசௌகரியத்தின் அடையாளமாகும்.

    இது குறித்து காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் கூறுகையில், ஒருவர் தூங்கும் போது அவரது மூச்சுப் பாதை பகுதியாகவோ அல்லது  முழுவதுமாகவோ அடைத்துக் கொள்கிறது. அப்போது, ரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்கலாம். இதனால் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்.

    தூங்கிக் கொண்டிருக்கும் போது இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், பக்கவாதம் போன்றவை ஏற்பட பெரும்பாலும் இதுவே காரணமாக அமைகிறது.

    அதிக உடல் எடை காரணமாக, வயிறு அல்லது கழுத்து அல்லது தொண்டைப் பகுதியில் அதிக கொழுப்பு சேர்ந்து விடும். இதனால், நுரையீரலால் நாம் ஆக்ஸிஜனை உள்ளிருக்கும் போது தேவையான அளவுக்கு விரிவடைய இயலாமல் போகும். இது, மூச்சை உள்ளிழுப்பதிலும், வெளியேற்றுவதிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.

    இந்த சமயங்களில், ஒருவரது ரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைந்து, கார்பன் டை ஆக்ஸைட் அதிகரித்து உடல்நிலை பாதிக்கப்பட நேரிடுகிறது.

    எனவே, குறட்டை தானே என்று எண்ணாமல், உடனடியாக உங்களது குடும்ப நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai