சுடச்சுட

  
  medicine2

  ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இதயத்திலிருந்து வெளியேறி உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் திசுக்களுக்கும் செல்கிறது. அதேபோல் இதயத் தசைகளுக்கும் செல்கிறது.

  மனிதனின் உடல் இயங்க, உயிருடன் இருக்க உடலின் ஒவ்வொரு உறுப்புக்கும், திசுக்களுக்கும் செல்களுக்கும், ஆக்ஸிஜனும் ஊட்டச்சத்துகளும், ஹார்மோன்களும், புரோட்டின்களும் நிறைந்த ரத்தம் தேவைப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு தான் இதயத்தின் வடிவமும் செயல்பாடும் அமைந்துள்ளது.

  ரத்தம் என்பது வெறும் சிவப்பு திரவமல்ல. அது திசுக்களும் செல்களும் இணைந்த கலவையாக ஒரு சிறப்புப் பணியை மேற்கொள்கிறது. ரத்தத்தில் 78 சதவீத தண்ணீரும் 22 சதவீத திடப் பொருள்களும் உள்ளன.

  பொதுவாக இதயத்தின் செயல்பாட்டிற்காக இதயத் தசைகளில் உள்ள ரத்தக் குழாய்க்கு கரோனரி ரத்தக் குழாய் என்று பெயர். கரோனரி ரத்தக் குழாய்களுக்குத் துணையாக சிறு சிறு நுண்ணிய ரத்தக் குழாய்களும் இதயத் தசைகளில் காணப்படுகின்றன. பொதுவாக இக் குழாய்கள் ரத்த ஓட்டத்திற்கு திறந்திருக்காது. இதயத் தசைகளுக்குச் செல்லும் கரோனரி ரத்தக் குழாய்கள் சில காரணங்களினால் குறுகலாகும்போது ரத்த ஓட்டம் தடைபடும்.

  அதை கரோனரி ஆர்ட்டரி நோய் என்று கூறுவோம். இத்தகைய சமயங்களில்தான் தடைபட்ட ஆர்ட்டரியின் அருகிலுள்ள நுண்ணிய சிறு சிறு ரத்தக் குழாய்கள் தாமே விரிவடைந்து சுறுசுறுப்பாகச் செயல்பட்டு ரத்த ஒட்டம் தடைபடாமல் இதயத்தின் செயல்பாட்டை சீர்படுத்தி மனிதனை காப்பாற்றுகின்றன.

  இவ்வாறு கரோனரி ரத்தக் குழாயில் மிக மோசமான அடைப்புகள் இருக்கும்பட்சத்தில் துணை ரத்தக் குழாய்களை திறந்துவிட்டு விரிவடையச் செய்யலாம். நோயாளிகள் அறுவை சிகிச்சையோ, பை-பாஸ் அறுவை சிகிச்சையோ செய்து கொள்ளாமல் புறநோயாளியாகவே ஆக்ஸிமெட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இதயத்தைக் காத்து உயிரைக் காத்துக் கொள்ளலாம்.

  ஆக்ஸிமெட் மருத்துவமனை அமெரிக்காவில் நியூயார்க்கில் உள்ள வாஸைா மெடிடெக் அமைப்புடன் இதற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்பினைப் பெற்றுள்ளது. இதுவரை இச்சிகிச்சை முறை மூலம் சுமார் 6000-த்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் பயனடைந்துள்ளனர். வாரந்தோறும் காலை 11.00 - 12.00 மணி வரை இதய நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆக்ஸிமெட் மருத்துவமனை நடத்துகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai