சுடச்சுட

  
  medicine4

  கர்ப்ப காலத்தில் முதல் மூன்று மாதங்கள் வரை களைப்பு ஏற்படுவது இயல்பானது. இந்தக் காலகட்டத்தில் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னைப் பழக்கிக் கொள்ள உடலுக்கு அவகாசம் தேவைப்படும்.

  கர்ப்ப காலத்தில் 12-வது வாரம் வரை ஹார்மோன் மாற்றங்கள் தொடரும். கர்ப்ப காலம் முழுவதிலும் கர்ப்பிணிக்கு களைப்பு ஏற்பட்டு அடிக்கடி சோர்ந்துவிடக் கூடும். குறிப்பாக நிறை மாதத்தின்போது களைப்பு அதிகரிக்கும்.

  இளஞ்சிறார்களை உடையவர்களுக்கும், களைப்பைத் தரும் வேலையில் இருப்பவர்களுக்கும் இந்தச் சூழலைக் கையாள்வது மிகவும் சிரமமான ஒன்றாகும்.

  பகலில் இரண்டு மணி நேரமாவது முழு அளவில் ஓய்வெடுக்க வேண்டும். நாளொன்றுக்குப் பத்து மணி நேரம் தூங்கி, எவ்வளவு முடியுமோ அவ்வளவு ஓய்வெடுத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

  சில சமயம் மனக் கவலையால் சோர்வு வந்து விடும். நீங்கள் எதைப் பற்றியாவது கவலைப்படுவதாக இருந்தால் அதைப் பற்றி உங்கள் கணவர், மருத்துவர் அல்லது நண்பருடன் மனம் திறந்து பேசுவது பயனுள்ளதாக இருக்கும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai