சுடச்சுட

  
  medicine3

  பற்கள் விழுந்து விட்டாலோ, சொத்தையாகி உபயோகமின்றி அகன்று விட்டாலோ அதே இடத்தில் செயற்கையான புதிய பல்லைக் கொண்டு இடைவெளியை நிரப்பிவிட முடியும்.

  டைட்டானியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைப் பல், மேலே பல் போன்றும், கீழே ஸ்க்ரூ போன்றும் அமைந்திருக்கும்.

  பொருத்தப்படுவது எப்படி? தாடையைத் தேவையான அளவுக்குத் துளையிட்டு இந்தச் செயற்கை பற்களை மருத்துவர்கள் பொருத்துகின்றனர்.

  நாளடைவில் எலும்பு, தசை, செல் வளர்ந்து ஸ்க்ரூ போன்ற பகுதியில் இணைந்து கொள்கிறது. எலும்பிலேயே இத்தகைய பற்கள் நிலைக்கப்படுவதால் வலுவாக இருக்கும். பிரச்னை இருக்காது. இயற்கையான தாடையிலுள்ள பல் வேரோடு அகற்றப்பட்ட பிறகு இந்தப் பல்லைப் பொருத்தலாம். அல்லது வேர் வடிவிலேயே பற்களைக் கொண்டு நிரப்பலாம்.

  இவ்வாறு செய்து கொள்வது சிறந்த வழியாக உள்ளது. செயற்கைப் பற்கள் உண்மையான பற்கள் போன்றே நிறத்திலும் வலிமையிலும் விரும்பத்தக்கதாக இருக்கும். ஒரு பல் விழுந்துவிட்டால் புதிய பல் கட்டுவது என்பது எளிதானது. அதே போன்று பல பற்கள் கட்டுவதும் இப்போதுள்ள தொழில்நுட்பத்தில் எளிதுதான். பல் போனால் சொல் போகும் என்பது அந்தக் காலம். எனினும் பல் போகும் அளவுக்கு அலட்சியமாக இல்லாமல் அவ்வப்போது பற்களைப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai