சுடச்சுட

  
  medicine1

  புற்றுநோய் மிக மோசமான ஒரு ஆட்கொல்லி நோயாகும். புற்றுநோய் என்பது சுமார் 100 நோய்களுக்கு பொதுவான பெயராக உள்ளது.

  மனித உடலின் செல்களில் வளர்சிதை மாற்றங்கள் நடைபெறுகின்றன. இது இளைமையில் வேகமாகவும், முதுமையில் மெதுவாகவும் நடைபெறுகிறது. ஈசஅ-வின் பாதிப்புகளாலும் வேறு சில காரணங்களினாலும் உடலில் உள்ள இயல்பான செல்கள் மற்றும் திசுக்களுக்கு பதிலாக மாறுபட்ட அல்லது முரண்பட்ட செல்கள், திசுக்கள் உருவாகி கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன. அவை கட்டியாக உருவெடுத்து உடலின் குறிப்பிட்ட உறுப்பின், பகுதியின் செயல்பாட்டை பாதிக்கின்றன. இத்தகைய முரண்பட்ட செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அல்லது அழிக்க சிகிச்சையளிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் அது உயிரையும் மாய்க்க வல்லது.

  சில வேளைகளில் அதிவேக வளர்ச்சியில்லாத மாறுபட்ட செல்கள் கட்டியாக உருவெடுக்கும் வாய்ப்பும் உள்ளது. அது புற்றுநோய் வகையைச் சார்ந்ததல்ல. இவை சாதாரண கட்டிகளே.

  பொதுவாக இயல்புக்கு மாறான (புற்றுநோய் செல்கள் ரத்தக் குழாய்கள் மூலம் அல்லது நிணநீர் மண்டலத்தின் மூலம் உடலெங்கும் பரவி, இயல்பான செல்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டு வளரத் துவங்குகின்றன. புற்றுநோய் செல்கள் உடலின் எந்தப் பகுதியிலிருந்து பரவுகிறதோ அதன் பெயராலேயே அழைக்கப்படுகிறது. உதாரணமாக மார்பகப் புற்றுநோய் ஏற்படும் போது அது கல்லீரலுக்கும் பரவுகிறது என்றாலும் மார்பகப் புற்று என்றே அழைக்கப்படுகிறது.

  புற்றுநோயைக் குணப்படுத்துவதில் பல முக்கிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் கண்டறியப்பட்டிருந்தாலும், புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகவே உள்ளது. வாந்தி, வாய்ப்புண், முடி உதிர்தல், மனச்சோர்வு, உடல் நலிவு போன்ற பக்க விளைவுகளிலிருந்து நோயாளிகள் தப்ப முடிவதில்லை.

  ஹோமியோபதி மருத்துவம்: இயற்கைக்கு மாறான செல்களினால் ஏற்படும் புற்றுநோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்த, அழிக்க ஹோமியோபதி மருத்துவம் ஆற்றல் கொண்டதாக உள்ளது. மனச்சோர்வு, பரபரப்பு ஏற்படுத்தாமல், இதமான இயல்பான அளவில் வலியைக் குறைத்து உடலுக்கு தெம்பூட்டும் சிகிச்சையை அளிப்பதோடு மேற்காணும் பக்கவிளைவுகளையும் ஹோமியோபதி மருத்துவம் ஏற்படுத்துவதில்லை. உடலின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு வல்லமையையும் அதிகரிக்கிறது.

  மற்ற ஆங்கில மருந்துகளுடன் சேர்த்து ஹோமியோபதி மருந்துகளைச் சாப்பிடலாம். உடல், மன உறுதி இவற்றைச் சார்ந்த நோயாக புற்றுநோய் இருப்பதால் ஹோமியோபதி மருந்துகள் மூலம் புற்று நோய்க்கான போராட்டத்தை ஒரு நோயாளி வெல்ல முடியும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai