சுடச்சுட

    

    இதயத்தை சரி செய்யவும், சீர் செய்யவும் திறன் பெற்ற ஸ்டெம்செல்கள் இதயத்திலேயே இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    லண்டன் கிங்க்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழக்கும் சமயங்களில் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், அதனை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டு வரவும் திறன் பெற்ற ஸ்டெம்செல்கள் இதயத்திலேயே அமைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.

    நல்ல ஆரோக்கியமான இதயத்தில் திடீரென மாரடைப்பு வந்து  தசைகள் பாதிக்கப்படும் போது, இந்த ஸ்டெம் செல்கள் இயங்க மருந்து செலுத்தப்படும் போது, அவைகள் இதயத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இதய பாதிப்பின் போது இந்த ஸ்டெம்செல்கள் பாதிக்கப்பட்டு விட்டால் இதயத்தை மீண்டும் சரி செய்வது இயலாமல் போய்விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai