Enable Javscript for better performance
கர்ப்பிணிகளுக்கே அதிகம் தேவைப்படும் ஆம்புலன்ஸ் சேவை- Dinamani

சுடச்சுட

    

    கர்ப்பிணிகளுக்கே அதிகம் தேவைப்படும் ஆம்புலன்ஸ் சேவை

    By dn  |   Published on : 17th August 2013 03:48 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pregnant

    தமிழகத்தில் மருத்துவ அவசர தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவை கர்ப்பிணிகளுக்கே அதிகம் தேவைப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கடந்த 2008ஆம் ஆண்டு முதல் பதிவான தகவலில், 22.5 லட்சம் அவசர மருத்துவ உதவி நாடியவர்களில் 26 சதவீதம் பேர் கர்ப்பிணிகள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கோ அல்லது மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கோ செல்வதற்காக ஆம்புலன்ஸை அழைத்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பொதுவாக சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதிகமாக ஆம்புலன்ஸை பயன்படுத்துவார்கள் என்று இதுவரை கருதி வந்த நிலையில், கடந்த ஆண்டு மட்டும் 15,000 கர்ப்பிணிகள் ஆம்புலன்ஸை பயன்படுத்தியுள்ளனர். 14 ஆயிரம் பேர் சாலை விபத்துக்களில் சிக்கி ஆம்புலன்ஸ் சேவையை அழைத்துள்ளனர். எனவே, ஆம்புலன்ஸில் இருக்கும் உதவியாளர்கள், மகப்பேறு துறையில் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியம் என்பது தெரிய வந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai