சுடச்சுட

  

  பொதுவாக இரண்டு நோய்களை உடையவர்களை குணப்படுத்துவது சற்று கடினமான காரியம்தான், அதிலும், காச நோய் இருப்பவர்களுக்கு நீரிழிவும் இருந்தால், காசநோயை குணப்படுத்துவதில் சற்று சிரமம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

  எவ்வாறு காசநோயுடன் எய்ட்ஸ் இருக்கும் போது மருத்துவ சிகிச்சை பலனளிப்பது குறைகிறதோ, அதேப்போல காசநோய் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் சிகிச்சை முறை முழு பலனை தருவதில்லை என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில், காச நோய் பாதித்த நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.

  இதையடுத்து, ஆய்வுக் குழுவின் தலைவர் மருத்துவர் விஜய் விஸ்வநாதன் கூறுகையில், அனைத்து அரசு மற்றும் தேசிய சுகாதார மையங்களிலும் காச நோய் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய்க்கான சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேப்போல நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கும் காசநோய்க்கான சோதனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

  எனவே, காசநோய் - நீரிழிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் பட்சத்தில், காச நோய் விரைவாக குணமடைகிறது. ஆனால், இந்தியாவில் 40 வயதினரை காச நோய் தாக்கும் போது, அவருக்கு ஏற்கனவே நீரிழிவும் இருக்கிறது. இதனால் சிகிச்சையில் பாதிப்பு ஏற்படுகிறது என்றார் மருத்துவர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai