சுடச்சுட

  

  ஆஸ்துமா நோயாளிகள் எவ்வளவு தான் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொண்டாலும், சுற்றுச்சூழலில் உள்ள மாசு காரணமாக அவர்களுக்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

  பல தீர்க்க முடியாத நோய்களின் பட்டியலில் ஆஸ்துமாவும் ஒன்றாக உள்ளது. ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள், உடலுக்கு குளிர்ச்சியான உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும், மாசடைந்த பகுதிகளுக்குச் செல்லாமலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

  மேலும், ஆஸ்துமா பாதித்தவர்கள் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலைகளில் செல்வதையும், அப்பகுதிக்கு அருகே பணியாற்றுவது அல்லது வசிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  இதேப்போல, கட்டைகளை எரிப்பதால் வரும் புகையாலும் ஆஸ்துமா அதிகமாக வாய்ப்பிருப்பதால், அது போன்ற இடங்களை தவிர்த்து விடுமாறு கூறியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai