சுடச்சுட

  

  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த பூனைக்கு நாயின் ரத்தத்தை செலுத்தி மருத்துவர்கள் குழு சாதனை படைத்துள்ளது.

  நியூசிலாந்தில் ஒரு பூனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்த பூனையின் ரத்தத்தை பரிசோதித்து, ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை வரவழைத்து செலுத்துவதற்குள் பூனை இறந்து விடும் நிலையில் இருந்தது.

  எனவே, மருத்துவர்கள் நாயின் ரத்தத்தை பூனைக்கு செலுத்த முடிவு செய்தனர். அதன்படி, பூனையின் உரிமையாளர் ஒரு நாயை வரவழைத்தார். அதன் ரத்தம் பூனைக்கு செலுத்தப்பட்ட உடன் பூனை குணமடைந்து பழைய நிலைக்குத் திரும்பியது.

  பூனைக்கு நாயின் ரத்தத்தை செலுத்தியதே இல்லை. ஆனால், எந்த சிகிச்சையும் அளிக்காவிட்டாலும் பூனை இறந்துவிடும். எனவே, நாயின் ரத்தத்தையாவது செலுத்தி காப்பாற்ற முயற்சித்தோம். அது நல்ல பலனை தந்தது என்கிறது மருத்துவர் குழு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai