Enable Javscript for better performance
இரும்புச் சத்து அதிகம் உள்ள தண்டு கீரை - Dinamani

சுடச்சுட

    

    பெரும்பாலும் தண்டு கீரை அனைவரும் விரும்பி உண்பதில்லை. கீரை  என்றாலே அரைக்கீரை, சிறிக்கீரை தான் சிலருக்கு தெரியும்.

    முளைக்கீரை வளர்ந்து பெரிதானால் தண்டுக் கீரை. தண்டுக் கீரையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று வெளிர் பச்சை மற்றொன்று சிவப்பு. இதில் சிவப்பு நிறத் தண்டுக் கீரை சத்தும் ருசியும் அதிகமுள்ளது.

    வெளிர் பச்சை கீரைத் தண்டின் பலன்:

    வெளிர் பச்சை கீரைத் தண்டில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகமாக காணப்படுகிறது. வாரம் ஒரு முறை இந்த கீரையை சமைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு நீங்கும். மூலச்சூடு தணியும், உடல் குளிர்ச்சியாகும். இந்த கீரைத் தண்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொந்தி கரையும். வாதம் உள்ளவர்கள் வெளிர் பச்சை கீரையை சாப்பிடக் கூடாது.

    சிவப்பு நிறக்கீரைத் தண்டின் பலன்:

    பெண்களின் மாதவிடாய் கோளாறுகளைக் குணமாக்கும் சக்தி சிவப்பு நிறக் கீரைத் தண்டுக்கு உள்ளது. மேலும் சிவப்பு கீரை சூட்டைத் தணிக்கும், மலச்சிக்கலைப் போக்கும், குடல் புண்ணை ஆற்றும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai