சுடச்சுட

  

  சிலருக்கு தொண்டையில் எப்போதும் ஒருவித எரிச்சல், கரகரப்பு இருந்துக் கொண்டே இருக்கும். இது நாளடைவில் புண்னை ஏற்படுத்திவிடும். சிலர் அடிக்கடி கனைத்துக் கொண்டே இருப்பர். இது மற்றவர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தும்.

  இவர்கள் வேப்பம் பூவை கொதிக்க வைத்த நீரில் போட்டு அதன் ஆவியை தொண்டையில் படும்படி செய்தால் தொண்டை புண் ஆறும். அல்லது கிராம்பை தணலில் வதக்கி வாயிலிட்டு சுவைக்க தொண்டைப்புண் ஆறும்.

  சுக்கு, பால், மிளகு, திப்பிலி, ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். அல்லது பூவரசன் வேர், பட்டை கஷாயம் செய்து கொப்பளித்து வர தொண்டையில் ஏற்படும் பிரச்னை அகலும்.

  சிலருக்கு தொண்டையில் சதை வளருவதை போல் தோன்றும். இவர்கள் வில்வ இலை சாறு, துளசி இலை சாறு 100 வீதம் எடுத்து நல்லெண்ணை 500 மில்லியில் கலந்து அடுப்பில் வைத்து காய்ச்சி வடிகட்டி பாட்டிலில் வைக்கவும். தினசரி ஒரு கரண்டி எண்ணை எடுத்து வாயில் விட்டு சில நிமிடங்கள் வாய் முழுவதும் ஒதுக்கி பின் கொப்பளிக்கவும். தொடர்ந்து 10 நாட்கள் கொப்பளிக்க குணம் தெரியும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai