சுடச்சுட

  

  தலைவலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில், அதிக வெயில், ரத்த அழுத்தம் அதிகமிருத்தல், உடல் சூட்டினால் அதிகத் தலைவலி, கடும் காய்ச்சலால் ஏற்படும் தலைவலி, கிறுகிறுப்பினால் ஏற்படும் தலைவலி போன்றவை தனி பித்த தோஷத்தின் கெடுதியினால் ஏற்படுகிறது.

  அதற்கு நெல்லிக்காய் பச்சையாக இருந்தால் காய்களை நசுக்கிக் கொட்டைகளை நீக்கிவிட்டு மிளகாய் அரைக்காத அம்மியில் துவையல் போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும். நெல்லிக்காய் உலர்ந்த வற்றலை (நெல்லிமுள்ளி), நெல்லிக்காய் போல அரைத்தும் பயன்படுத்தலாம். சுமார் ஒரு பெரிய நெல்லிக்கனியளவு எடுத்துக்கொண்டு, அரைத்த சந்தனம் நெல்லித் துவையலில் பாதியளவு சேர்த்து கலந்து கொள்ளவும். நெற்றியிலும், உச்சந்தலையிலும் சுமார் புளியங் கொட்டை கனம் பற்றுப் போடவும். பச்சைக் கற்பூரம் சுமார் 2-3 அரிசி எடை சேர்ப்பது விசேஷம்.

  பேராசிரியர்

  எஸ். சுவாமிநாதன்,

  ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,

  நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)

  செல் : 9444441771

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai