சுடச்சுட

  

  சர்க்கரை நோய்த் தடுப்பைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஈட்டுறுதி மருந்தகம் மற்றும் மருத்துவமனைகள், தேர்வு செய்யப்பட்ட நகராட்சி மருந்தகம் மற்றும் மருத்துவமனைகளில் சர்க்கரை நோயைக் கண்டறியும் பரிசோதனைகள் இலவசமாகச் செய்யப்படுகின்றன.

  உலக சர்க்கரை நோய் தினத்தை (நவ.14) முன்னிட்டு தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட தகவல்கள்:-

  சர்க்கரை நோயைக் கண்டறிய மற்றும் கட்டுப்படுத்தும் சிகிச்சைத் திட்டமானது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதான ஆண், பெண் இருபாலருக்கும் சிகிச்சைக்கான மருந்துகள், வாழ்க்கை நடைமுறை மாற்றத்துக்கான ஆலோசனைகள், தொடர் கண்காணிப்பு மற்றும் மருத்துவ பரிந்துரை சேவைகள் வழங்கப்படுகின்றன.

  உடலில் தேவையான அளவு இன்சுலின் சுரக்காமல் போனாலோ அல்லது சுரக்கப்படும் இன்சுலின் உடலில் செயல்படாமல் போனாலோ சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் கண், சிறுநீரகம், இதயம், நரம்பு, பாதம் போன்ற முக்கிய உறுப்புகள் பாதிப்படையக் கூடும்.

  கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கி கடந்த செப்டம்பர் மாதம் வரை 49 லட்சத்து 3 ஆயிரத்து 82 ஆண்கள் மற்றும் பெண்கள் சர்க்கரை நோய்க்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களில் 2 லட்சத்து 22 ஆயிரத்து 663 பேருக்கு சர்க்கரை நோய் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்களுக்கு உரிய சிகிச்சையும் தொடர் கண்காணிப்பும் அளிக்கப்பட்டு வருகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai