குழந்தையின்மை: சர்க்கரை நோயும் காரணமாக இருக்கலாம்
Published on : 14th November 2013 04:01 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இளம் தம்பதியர்கள் கருத்தடை எதுவும் செய்து கொள்ளாமலிருந்தும், 12 மாதங்களில் பெண் கருத்தரிக்கவில்லை என்றால் அவர்களுக்கு மகப்பேறின்மை பிரச்னை இருப்பதாகக் கருதலாம்.
மகப்பேறின்மைக்கு சர்க்கரை நோயும் ஒரு காரணம். கணைய நீர்ச்சுரப்பியிலிருந்து வெளியாகும் உயிரணுக்களின் குறைவும் சர்க்கரை நோய்க்குக் காரணமாகலாம். அதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கூடுகிறது.
இதன் விளைவாக ஆணின் விந்தணுவின் அளவு குறைந்து மகப்பேறின்மை உண்டாகிறது. மேலும் இதனால், ஆண் விதைகளில் உற்பத்தியாகும் உயிர் விந்தின் குறைபாடும் கருவுறுதல் நடக்கத் தடையாய் அமைகிறது.
கருவுயிர் விந்தின் தரத்துக்கும், ரத்தத்தின் சர்க்கரை அளவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. அதிகப்படியான சர்க்கரை உள்ள நோயாளிகளின் விந்தில் இறந்துபட்ட அல்லது ஊனமுள்ள கருமுட்டைகள் அதிகமாகின்றன. எனவே, பெண் கருத்தரிக்க முடியாமல் போகிறது.
சர்க்கரை நோயுடன் உடல் பருமன், ஆண்குறியின் விரைப்புத்தன்மை குறைதல் ஆகிய காரணங்களால், சர்க்கரை நோயாளிகள் பாலியல் உறவில் முழுமை அடைய முடியாமல், அவர்கள் மகப்பேறின்மைக்கு உள்ளாகின்றனர்.