Enable Javscript for better performance
குழந்தை சர்க்கரை நோய்: பிரித்தறிய முயற்சி எடுங்கள்- Dinamani

சுடச்சுட

    
    value

    குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கான சர்க்கரை நோய் தாக்கம், உலகம் முழுவதும் அதிகரித்து, பொதுச் சுகாதார பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இவர்கள் மத்தியில் டைப்-1 வகை சர்க்கரை நோய் அதிகமாக உள்ளதாக கூறப்படுவது தவறு. எனவே குழந்தைகள், இளைஞர்களிடம் காணப்படும் சர்க்கரை நோய் வகை பிரச்னையைச் சரியாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம்.

    இளம் வயதில் சர்க்கரை நோய்க்கான காரணங்கள்: அதிக எடை (பிஎம்ஐ 23க்கு மேல்); பெற்றோர் டைப் - 2 சர்க்கரை நோய் பாதிப்புள்ளவராக இருத்தல் - தாய்க்கோ தந்தைக்கோ இருந்தாலும்; புறங்கழுத்திலோ, அக்குள் பகுதியிலோ கருப்புநிற வெல்வட் சருமம் காணப்படுதல். குறைந்த வயதில் பருவம் எய்துதல். உடல் உழைப்பு குறைவாக, சோம்பி இருத்தல்.

    புஷ்டியான குழந்தை-ஆரோக்கியம் அல்ல: குழந்தைகளுக்கும், இளம் வயதினருக்கும் சர்க்கரை நோய் பிரச்னை இருப்பின் அது கட்டாயம் டைப் 1 வகை சர்க்கரை நோயாக இருக்க வேண்டிய அவசியமில்லை. டைப்-2 சர்க்கரை நோய் வகையாகக்கூட இருக்கலாம். சரியான பரிசோதனை முடிவு அவசியம். விளையாட்டு மற்றும் ஓடி ஆடித் திரிதல், உடல் பருமன் இல்லாமை ஆகியவற்றின் மூலம் குழந்தைப் பருவ டைப் - 2 வகை சர்க்கரை நோயை வராமல் தடுக்க முடியும். கொழுகொழு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது எனக் கூற முடியாது. குழந்தையை வெறும் புஷ்டியாக வளர்த்தல் முக்கியமானதில்லை. பொதுவான ஆரோக்கியமே குழந்தைகளுக்கு அவசியம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai