சுடச்சுட

  

  இந்திய அளவில் 62 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடப்பட்டாலும், இன்றும் பொது மக்கள் மத்தியில் சர்க்கரை நோய் பற்றிய விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது.

  போதிய விழிப்புணர்வுடன் ஆரம்ப நிலையிலேயே சர்க்கரை நோயைக் கண்டறிந்து, சரியான மருத்துவ ஆலோசனை பெற்றால், சிறுநீரகம் மற்றும் கால்கள் இழப்பதைத் தவிர்க்கலாம். இதற்கு ஒருவர் தமக்கு சர்க்கரை நோய் உள்ளதா, இல்லையா எனத் தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இப் பரிசோதனையில், சர்க்கரை நோய் பாதிப்பு தெரியவந்தால், ரத்த சர்க்கரை அளவு மேலும் அதிகரிக்காமல் இருக்க டாக்டரின் பரிந்துரைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

  சர்க்கரை நோய்த் தடுப்பை கருத்தில் கொண்டு சென்னை ராயபுரம் சர்க்கரை நோய் மருத்துவமனையில் "சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம்' தொடங்கப்பட்டுள்ளது. இம் முகாமில், ரூ.100 க்கு சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai