Enable Javscript for better performance
மாரடைப்புக்கும் அறிகுறிகள் உண்டு- Dinamani

சுடச்சுட

    
    28heart

    மாரடைப்பு என்பது ஏதோ திடீரென ஏற்பட்டு, உடனடியாக உயிரைக் குடித்துவிடும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒரு வாரம் முதல் ஒரு மாதத்துக்குள் பல்வேறு அறிகுறிகள் ஏற்பட்டிருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    அதாவது, இதுவரை கடுமையான மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து திரும்பிய ஏராளமான நபர்களிடம், நடத்திய ஆய்வில், ஒரு மாதத்துக்கு முன்பில் இருந்து மாரடைப்பு ஏற்படும் வரையில் சில அறிகுறிகள் அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    குறிப்பாக, மாரடைப்பு ஏற்பட ஒரு வாரத்துக்கு முன்பு, 56 சதவீதம் பேருக்கு நெஞ்சு வலி, 13 சதவீதம் பேருக்கு மூச்சு விடுவதில் சிரமம், 4 சதவீதம் பேருக்கு மயக்கம், தொய்வு நிலை போன்றவை ஏற்பட்டுள்ளது.

    மாரடைப்பு ஏற்பட்ட அனைவருக்குமே இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதும், அதுவும் 4 வார இடைவெளிக்குள் 80 சதவீதம் பேருக்கு இந்த அறிகுறிகள் ஏற்பட்டிருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai