ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரிக்கு தேசிய பரிசோதனை தரச் சான்றிதழ்

குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியின் அனைத்து மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கும் தேசிய மருத்துவப் பரிசோதனை மற்றும் துல்லிய அளவீடு அங்கீகார தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரிக்கு தேசிய பரிசோதனை தரச் சான்றிதழ்

குரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியின் அனைத்து மருத்துவப் பரிசோதனைக் கூடங்களுக்கும் தேசிய மருத்துவப் பரிசோதனை மற்றும் துல்லிய அளவீடு அங்கீகார தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனைத்து மருத்துவப் பரிசோதனைக் கூடங்களையும் துல்லியமான மருத்துவப் பரிசோதனை அறிக்கை வழங்கும் உயர்தரமிக்க மருத்துவப் பரிசோதனைக் கூடங்களாக மேம்படுத்த வேண்டும். அதன் மூலம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல், இங்கு இலவச மருத்துவச் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும் மிகுந்த பயன் பெறுவர் என்று பாரத் பல்கலைக்கழகக் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் அறிவுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டுவரும் அனைத்து மருத்துவப் பரிசோதனைக் கூடங்களையும் மத்திய அரசின் தேசிய மருத்துவப் பரிசோதனை மற்றும் துல்லிய அளவீடு அங்கீகார நிறுவனத்தின் ஆய்வுக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

தேசிய அங்கீகாரம்: ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நோயியல், உயிரி வேதியியல், நுண்ணுயிரியல், உயிரணுவியல் உள்ளிட்ட 6 மருத்துவப் பரிசோதனை துறைத் தலைவர், பணியாளர்கள் ஒத்துழைப்புடன், மருத்துவப் பேராசிரியர்கள் ஹேமலதா கணபதி, சாந்தி, பிரவீனா, கலைச் செல்வி ஆகியோர் மேற்கொண்ட தொடர் மருத்துவப் பரிசோதனை ஆய்வு செயல்பாடுகள் மூலம், என்.ஏ.பி.எல். நிறுவனத்தின் தேசிய மருத்துவப் பரிசோதனை தரச்சான்று அங்கீகாரம் ஐ.எஸ்.ஓ.15189-2012 கிடைத்துள்ளது.

இந்த மருத்துவச் சான்றிதழ், ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் அனைத்து நோய்களுக்கான ரத்தப் பரிசோதனைகள், ரத்த,திசுப் புற்றுநோய்க்கான பரிசோதனைகள், விந்தணு பரிசோதனைகள் உள்ளிட்ட பலவகை பரிசோதனைகள் குறித்த துல்லியமான அளவீடை உறுதி செய்வதால் நோயாளிகள் துல்லிய மருத்துவப் பரிசோதனை அறிக்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com