சிறுமியின் கணையக் குழாயில் கற்கள்: நுண்துளை மூலம் அறுவைச் சிகிச்சை

கணையக் குழாயில் கற்கள் இருந்ததால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நுண்துளை மூலம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கணையக் குழாயில் கற்கள் இருந்ததால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு, போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் நுண்துளை மூலம் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கணையக் குழாயில் கால்சியம் கற்கள் தேங்கியிருந்ததால் அதிக வலியும், கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ள முடியாமலும் 15 வயது சிறுமி அவதிப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோய்ப் பாதிப்பு இருந்தது. இதனால் சுமார் 5 ஆண்டுகளாக வலியால் அவதிப்பட்டு வந்தார்.

போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் குழந்தைகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவில் சிறுமி அண்மையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுண்துளை மூலம் அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

இந்தப் பிரச்னைக்கு வயிற்றுப்பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்து, பாதிக்கப்பட்ட கணையக் குழாய்க்கு பதில் மாற்றுக்குழாய் சிறுகுடலோடு இணைக்கப்படும். இதே சிகிச்சை நுண்துளையின் மூலம் சிறுமிக்கு மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின்பு சிறுமிக்கு வலி குறைந்துவிட்டது. சாதாரண அறுவைச் சிகிச்சை மேற்கொண்டால் 10 முதல் 15 நாள்களுக்கு மருத்துவமனையில் தங்கியிருக்க வேண்டும். நுண்துளையின் மூலம் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால் 5 நாள்களுக்குள் வீடு திரும்புவார் என்று குழந்தைகள் அறுவைச் சிகிச்சைப் பிரிவுத் தலைவர் பிரகாஷ் அகர்வால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com