சுடச்சுட

  

  இருதய ரத்தக்குழாய் சிகிச்சை குறித்த சர்வதேச கருத்தரங்கம்

  By மதி  |   Published on : 13th August 2016 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இருதய ரத்தக் குழாய்களில் ஏற்படும் பாதிப்புகளுக்கான சிகிச்சை குறித்த சர்வதேசக் கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை தொடங்க உள்ளது.

  மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் சார்பில் நடைபெறும் இந்த கருத்தரங்கம் முகப்பேரில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் நடைபெறவுள்ளது.

  இது தொடர்பாக கருத்தரங்கத்தின் இயக்குநர் டாக்டர் முல்லாசாரி அஜித், டாக்டர் சிவக்குமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது: இருதய வால்வுகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கான சிகிச்சை, அறுவைச்சிகிச்சை அல்லது இருதய மாற்று அறுவைச் சிகிச்சை தீர்வாகக் காணப்படுகிறது. ஆனால் நவீன செயற்கை வால்வுகள் இதற்கு மற்றொரு தீர்வாகக் காணப்படுகிறது. சென்னையில் ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சர்வதேசக் கருத்தரங்கில் இருதய வால்வுகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நவீன செயற்கை வால்வுகளைப் பொருத்தும் சிகிச்சை முறை குறித்து விவாதிக்கப்படும் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai