சுடச்சுட

  
  teeth

  குழந்தைக்கு 1 அல்லது ஒன்றரை வயதாகும் போது குழந்தை நல மருத்துவரிடம் சென்று குழந்தையின் பல் வளர்ச்சி மற்றும் பல் பாதுகாப்புக் குறித்து ஆலோசனை பெறுதல் நல்லது.

  குழந்தைகளுக்கு பால் புட்டிகளில் பால் புகட்டுவதை பழக்கப்படுத்த வேண்டாம். அது உங்கள் குழந்தையின் பற்களை பாதிப்பதோடு, காதுகளில் கிருமி தொற்று ஏற்படவும் வாய்ப்பாகிவிடும்.

  ஒவ்வொரு முறை பால் கொடுத்ததும், சுத்தமான துணியை சுடு நீரில் நனைத்து, பற்களையும், ஈறுகளையும் துடைத்து விடவும். உதடுகளையும் துடைக்கவும்.

  குழந்தைகளுக்கான மிருதுவான பிரஷ்ஷைக் கொண்டு குழந்தைகளுக்கு பல் விளக்கி விடவும்.

  பற்களில் ஒட்டிக் கொள்ளும் தன்மை கொண்ட சாக்லேட், க்ரீம்களை சாப்பிட்டதும் வாயைக் கொப்பளிக்கும் படி குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்.

  ஓரளவிற்கு பற்கள் முளைத்ததும், உங்கள் குழந்தைக்கு அளிக்கும் உணவை அதிகம் மசிக்காமல், நன்கு மென்று சாப்பிடப் பழக்கப்படுத்துங்கள்.

  இரவில் வாயைக் கொப்பளித்துவிட்டு வந்து படுக்குமாறு கூறுங்கள். அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் இரவிலும் பிரஷ் செய்யச் சொல்லலாம்.

  பற்கலில் கறையோ, பற்கள் மஞ்சள் நிறமாகவோ காணப்பட்டால் உடனடியாக பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

  பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைக்கும் போது குழந்தைகளை கவனமாகப் பார்த்துக் கொள்ளவும்.

  பற்கள் தொடர்பாக பரம்பரை ரீதியாக ஏதேனும் பிரச்சினை இருக்கும்பட்சத்தில், அது குறித்து பல் மருத்துவரிடம் கூறி சிகிச்சை பெறுவது நல்லது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai