நூற்றாண்டுகளாக நமது உணவில் ஆதிக்கம் செலுத்தும் காளான் - பயனை அறிவீர்களா? 

இது ஒரு தாவரம் இல்லை என்றாலும் காலன்களை நம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம்.
நூற்றாண்டுகளாக நமது உணவில் ஆதிக்கம் செலுத்தும் காளான் - பயனை அறிவீர்களா? 

காளான் காய்கறிகள் வகையில் சேர்க்கப்பட்டாலும் அது உண்மையில் பூஞ்சை என்னும் உயிரின வகையைச் சார்ந்தது. இது ஒரு தாவரம் இல்லை என்றாலும் காலன்களை நம் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துக்களை நாம் பெறலாம்.

உணவில் போதுமான அளவு வைட்டமின் மற்றும் தாதுகளை பெறப் பழங்கள், காய்கறிகளைச் சாப்பிடுவதோடு காளான்களையும் சேர்த்துக்கொள்வது நாம் நினைத்துப் பார்க்காத அளவு நன்மைகளைத் தரவல்லது. அதே சமயத்தில் காளான்களில் 50 சதவீதம் விஷத்தன்மை உடையது என்பதை மறந்துவிடாதீர்கள், ஆகையால் உட்கொள்ளத் தக்க காளான்களை அறிந்து உண்ணுங்கள்.

நீரிழிவைக் குறைக்கும்:

அதிகமான நார் சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் முதல் நிலையில் இருக்கும் நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்கும் என்றும், அதே சமயம் நீரிழிவின் இரண்டாம் நிலையால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சராசரியாக நமது உடலுக்குத் தினசரி 25 முதல் 30 கிராம் வரையிலான நார் சத்து தேவைப்படுகிறது, அதன் அடிப்படையில் காளான்களில் நமக்குத் தேவையான நார் சத்து நிறைந்துள்ளது. 

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்:

காளானில் உள்ள நார், பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஆரோக்கியமான இதயத்திற்கு மிகத் தேவையான ஒன்று. பொட்டாசியம் அதிகமாகவும் மற்றும் சோடியாம் குறைவாக இருக்கும் காளான்களை உண்பது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். மேலும் இயற்கையான முறையில் இதய நோய்க்கு முக்கிய காரணமாக இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைக்கும். அதே வேளையில் காளானால் நல்ல கொழுப்பின் அளவையும் உயர்த்தவும் முடியும். 

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்:

நோய் எதிர்ப்பிற்குக் காரணமாக இருக்கும் உயிரணுக்களின் உற்பத்தியைக் காளான் உயர்த்தும் என்று தெரியவந்துள்ளது. உடலில் சீரான பி.எச் அளவை உற்பத்தியாக வழி செய்வதால் நோய் உருவாவதற்கான காரிய சூழலை இது தகர்த்துவிடுகிறது. காளான் இயல்பாகவே ஆபத்தான பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது, ஆகையால் மனித உயிரணுக்களை இது பாதுகாக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. 

புற்றுநோய் வருவதைத் தடுக்கும்:

பல பழங்கள் மற்றும் காய்கறிகளில் இல்லாத செலினியம் என்னும் மினரல் சத்து காளானில் உள்ளது. இது கல்லீரல் செயல்பாட்டைப் பாதிக்கும் சில புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. சூரிய ஒளியிலிருந்து அதிகமாகப் பெறக்கூடிய வைட்டமின் டி சத்து காளானிலும் இருக்கிறது, மேலும் காளானில் இருக்கும் ஃபோலேட் மரபணுக் கோளாறுகளை சீர் செய்து புற்றுநோய் செற்கள் உருவாகுவதைத் தடுக்கிறது. இது இயற்கையின் புற்றுநோய் நிவாரணி ஆகும், அறியப்படாத மற்றும் ஆபத்தான புற்றுநோய் செற்களை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. 

பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் உணவில் ஒரு பகுதியாக இருந்திருக்கிறது காட்டுக் காளான்கள், இன்றை நிலையில் சாகுபடி செய்யப்பட்ட காளான்கள் பாதுகாப்பானவை ஆகும். நச்சுத்தன்மையுள்ள காட்டு காளானைச் சாப்பிடுவதால் கடுமையான நோய்கள், மேலும் சில நேரங்களில் மரணம் கூட ஏற்படலாம். இந்த அபாயத்தை தவிர்க்கப் பொருத்தமான சூழ்நிலைகளில் பயிரிடப்பட்ட காளான்களை உண்ணுங்கள்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com