அல்ஜீமர் நோயைத் தடுக்க இதை சாப்பிடுங்க!

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால்
அல்ஜீமர் நோயைத் தடுக்க இதை சாப்பிடுங்க!

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகமுள்ள உணவு வகைகளை சாப்பிட்டு வந்தால் அல்ஜீமர் நோய்க்கு நோ என்ட்ரி சொல்லிவிடலாம் என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. காரணம் ஒமேகா 3 நினைவாற்றல் செல்களை அதிகரித்து மூளையை சுறுசுறுப்பாக்க உதவுகிறது, அதனால் அல்ஜீமர் நோய் பாதிப்புக்களிலிருந்து தப்பலாம் என்பதே அந்த ஆராய்ச்சியின் முடிவு.

அல்ஜீமர் என்றாலே அது கொஞ்சம் கொஞ்சமாக ஞாபக சக்தியை இழக்கச் செய்து ஒரு கட்டத்தில் நாம் யாரென்றே மறக்க செய்துவிடும் அளவுக்கு கொடுமையானது. நினைவாற்றல் மற்றும் மூளைத் திறனை முற்றிலும் பாதிப்படையச் செய்துவிடும் நோய் அது. இந்த நோயைத் தடுக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மத்தி, நெத்திலி, கெளுத்தி மற்றும் சால்மன் வகை மீன்களில் உள்ளது. சைவத்தில் ப்ளக்ஸ் விதை, வால்நட், சோயா பீன்ஸ் மற்றும் புதினா ஆகியவற்றை காணப்படுகின்றது.  மூளையின் ஆரோக்கியத்துக்கு இந்த சத்து மிகவும் அவசியம்.

ஒமேகா 3ல் ALA (A Linolenic Acid), EPA (Eicosa Pentaenoic Acid), DHA (Aocosa Hexaenoic Acid) என்ற 3 வகைகள் உள்ளன. கடல் உணவுகளில் EPA, DHA வகைகள் இருக்கின்றன. சைவத்தில் ALA மட்டும் இருக்கிறது. இந்த ஆராய்ச்சியில் ஒமேகா 3 யின் EPA+DHA நிலை, மூளை திரவ நிலை மற்றும் மூளையின் அறிவாற்றல் நிலை ஆகியவற்றை ஒன்றிணைத்து சாதகமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கிறது இந்த ஆய்வு.

மருந்து மாத்திரைகள் மூலமாகவும் ஒமேகா 3 பெற முடியும். மீனில் இருந்து தயாரிக்கப்படும் மீன் எண்ணெய்மாத்திரைகளில் ஒமேகா 3 இருக்கிறது. ஆனால் உணவின் வாயிலாகக் கிடைக்கும் சத்து தான் மிகவும் நல்லது. காரணம் உணவுடன் சேர்ந்து பெறும் போது உணவில் உள்ள மற்ற ஊட்டச்சத்துகளும் கிடைத்துவிடும். கர்ப்பிணிகள் தேவையான அளவு ஒமேகா 3  எடுத்துக்கொள்ளாத பட்சத்தில்  பிறக்கும் குழந்தைகள் கவனக்குறைபாட்டுப் பிரச்னைக்கு ஆளாகலாம். கர்ப்ப காலத்தில் ஒமேகா 3 உணவுகளை சாப்பிட்ட பெண்களுக்குப் பிறந்த குழந்தைகள் புத்திக்கூர்மையுடன் இருப்பதும் முந்தைய ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது.

ஒமேகா 3 உணவு உட்கொண்டவர்களின் செய்த வேலைகள் அறிவாற்றலுடன் இருந்தது. நவீன கண்டுபிடிப்பான SPECT (Single photon emission computed tomography) எனும் இமேஜிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மூளை ஆராய்ச்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இதில் உடலில் ஒமேகா 3 சத்து அதிகமுள்ள 166 நபர்கள் பங்கேற்றனர். அவர்களின் அறிவாற்றல் திறன், மூளையின் ரத்த ஓட்டம் மற்றும் நரம்பியல் சோதனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 

ஜர்னல் ஆஃப் அல்ஜீமர் டிசீஸ் (Journal of Alzheimer's Disease) எனும் பத்திரிகையில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. ஒமேகா 3 கொழுப்பு அமிலத்தால் மன நலன் மேம்படுகின்றது என்றும் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com