30 நிமிடங்களுக்கு இதைச் செய்வதால் கச்சிதமான உடல் அமைப்பைப் பெறலாம்: புதிய ஆய்வு முடிவு!

30 நிமிடங்களுக்கு இதைச் செய்வதால் கச்சிதமான உடல் அமைப்பைப் பெறலாம்: புதிய ஆய்வு முடிவு!

எவ்வளவு முயற்சி செய்தாலும் மாதத்தில் 10 நாட்கள் மட்டும் போகும் உடற்பயிற்சி கூடத்திற்கு வீணாகக் பணத்தை செலவு செய்கிறீர்களா? இதோ உங்களைப் போன்றோர்காகவே சமீபத்திய ஒரு ஆய்வு.

எவ்வளவு முயற்சி செய்தாலும் மாதத்தில் 10 நாட்கள் மட்டும் போகும் உடற்பயிற்சி கூடத்திற்கு வீணாகக் பணத்தை செலவு செய்கிறீர்களா? இதோ உங்களைப் போன்றோர்காகவே சமீபத்திய ஒரு ஆய்வில் வீட்டில் தினமும் 30 நிமிடங்கள் வரை செய்யும் சிறு அடிப்படை வேலைகள் மூலம் நல்ல உடல் அமைப்புயும் ஆரோக்கியத்தையும் பெறலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எப்படி என்று யோசிக்கிறீர்களா? வாருங்கள் பார்க்கலாம். 

உலகம் முழுவதிலும் உள்ள 17 நாடுகளில் (இந்தியாவில் 4 முக்கிய பெருநகரங்கள்) இருந்து 1,30,00-க்கும் மேற்பட்டவர்களை இந்த ஆய்வில் ஈடுபடுத்தி ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். அதில் வாரத்திற்கு 150 நிமிடங்கள் செய்யும் வீட்டு வேலைகளின் மூலம் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை 20% வரை குறைக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜிம் மற்றும் ஜும்பா வகுப்புகளுக்குச் சென்று பெறக்கூடிய கச்சிதமான உடல் அமைப்பையும் இதனால் பெற முடியும் என்று கூறியுள்ளார்கள். மருத்துவம் சார்ந்த ஆங்கிலப் பத்திரிகையான ‘தி லான்சட்’ இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்தப் பத்திரிகை இதற்கு முன்பாக வெளியிட்டிருந்த மற்றொரு ஆய்வு முடிவில் வெறும் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் மட்டுமில்லாமல் பேலன்ஸ் டயட் என்று நாம் ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு முறை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்புகள் உட்கொள்வதும் இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரித்து மரணத்தை ஏற்படுத்தும் என்று அனைவரது நம்பிக்கைக்கும் எதிரான ஒரு முடிவை வெளியிட்டது. 

இப்போது குறைந்த வருமானம் உள்ள நாடான இந்தியா போன்ற நாடுகளில் அவரவர் வீட்டு வேலைகளை அவர்களே செய்வதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு 28% குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. சென்னையைச் சார்ந்த நீரிழிவு மருத்துவர் ஆர்.எம்.அஞ்சனா இந்த ஆய்வு இந்தியாவின் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது என்று கூறியுள்ளார். “நாம் பல நாட்களாக அருகில் இருக்கும் அலுவலகத்திற்கு நடந்து செல்வது, லிஃப்ட்டை உபயோகிக்காமல் படிக்கட்டை பயன்படுத்துவது மற்றும் வீட்டு வேலைகள் செய்வது மட்டும் சரியான உடற்பயிற்சி கிடையாது என்று கூறி வருகிறோம். அது முற்றிலும் தவறு என்பதை இந்த ஆய்வு முடிவு தெளிவுபடுத்தி இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆய்வில் ஈடுபட்டவர்கள் செய்த வேலைகள் என்னவென்றால், வீட்டைப் பெருக்குவது, மாப் பயன்படுத்தி துடைப்பது, தோட்ட வேலைகள் செய்வது போன்ற அடிப்படை வேலைகள்தான். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் சலீம் யூசஃப் கூறுகையில் “நடுத்தர வற்கத்தைச் சேர்ந்தவர்கள் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டால் அது அவர்களது தலையில் மிகப்பெரிய பாரத்தை ஏற்றியது போல் ஆகும், ஆகையால் வாரம் 150 நிமிடங்கள் என ஐந்து ஆண்டுகளுக்கு சாதாரண வீட்டு வேலைகள் செய்வது இந்தத் தேவையற்ற கவலையில் இருந்து அவர்களைப் பெரிதும் காப்பாற்றும்” என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com