Enable Javscript for better performance
குடும்ப வன்முறைக்கு உளவியல் பிரச்னைதான் காரணம் – உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால்- Dinamani

சுடச்சுட

    

    குடும்ப வன்முறைக்கு உளவியல் பிரச்னைதான் காரணம்: உயர் நீதிமன்ற நீதிபதி வேணுகோபால்

    By DIN  |   Published on : 15th October 2016 04:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ipsocon_2


    குடும்பத்தில் ஏற்படும் வன்முறைகளுக்கு உளவியல் ரீதியிலான பிரச்னைகளே முக்கியக் காரணம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் கூறினார்.

    இந்திய உளவியல் அமைப்பின் 49-வது ஆண்டுக் கூட்டம் (IPSOCON – 2016) சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.வேணுகோபால் தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

    மூன்று நாள் நடைபெறும் இக் கூட்டத்தை தொடங்கி வைத்து நீதிபதி எம்.வேணுகோபால் பேசியதாவது –

    குடும்ப வன்முறைக்கு உளவியல் பிரச்னைகள் காரணமாக அமைகிறது. சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய ஆய்வு இதைத்தான் கூறுகிறது. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைக்குக் காரணம் உளவியல் பிரச்னைகள்தான். அத்தகைய வன்முறை உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ அல்லது பாலுறவு சார்ந்தோ இருக்கலாம். பொருள்களை உடைப்பது, குடும்பத்துக்குத் தேவையான பணத்தை தராமல் இருப்பது, பயமுறுத்துவது, அடிப்பது போன்ற செயல்களில் மன பாதிப்புடையவர் செய்வதால் அது ஒட்டுமொத்த குடும்பத்தின் நிம்மதியைக் குலைத்துவிடுவதுடன், அவரால் அவமதிக்கப்பட்டவர் பெரிதும் பாதிப்படைவார். இது தொடர்ந்தால் அது சமூக சீர்குலைவாகும்.



    உளவியல் தந்தை எனப் போற்றப்படும் சிக்மெண்ட் ப்ராய்டின் உளநிலைப் பகுப்பாய்வில் மனதின் தன்மைகளை மூன்று வகைகளாக பிரிக்கிறார்.

    1. இட் (Id): இன்பம், விருப்புகள், உணர்ச்சிகள் மற்றும் விருப்பத்தீர்வு
    2. ஈகோ (Ego): விழிப்பு நிலை, பகுத்தறிதல், தன்னிலை அறிதல், போன்றவை
    3. சூப்பர் ஈகோ (Super Ego): இது இட்-னை தணிக்கை செய்து பகுத்தறிந்து ஈகோவை வெளிக்கொணர்கிறது.

    நாம் விழிப்பு நிலையில் இருக்கின்றபோது இட்-ன் உணர்வுகள் மற்றும் விருப்புகள், சூப்பர் ஈகோவினால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆனால் தூக்கத்தின்போது இது செயல்படுவதில்லை என்பதால் இந்த உணர்வுகள் கனவுகளாக வெளி வருகின்றன.

    இட்-ன் உணர்வுகள் தூக்கத்திற்கு இடையூறு விளைவிப்பவையாக இருந்தால் அது தணிக்கை செய்யப்பட்டு, குறியீட்டு மொழிகளாக மாற்றி கனவுகளில் ஓடவிடுகிறது. இதனால் இட்-ன் உணர்வுகளும் வெளிப்படுகின்றன. தூக்கமும் கலைவதில்லை. சில சமயம் வரும், குழப்பக்கூடிய மற்றும் முழுமை பெறாத கனவுகளுக்கும் இந்த செயல் முறையே காரணம். இதனால் மன பாதிப்புக்கள் ஏற்பட்டு உள் மன போராட்டத்திலிருந்து விடுபட சிலர் குற்றம் புரிகிறார்கள்.

    மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில், பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமாக உள்ள உளவியல் ரீதியான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் என்று நம்புகிறேன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai