

மூளைச்சாவு அடைந்த 12 வயது சிறுவனின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன.
சென்னை அய்யப்பன்தாங்கல் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.எழிலசரன் மற்றும் செளந்தரி தம்பதியரின் மகன் சந்தோஷ்குமார்.
7 -ஆம் வகுப்பு படித்து வந்த சந்தோஷ் தலைவலி, வாந்தி, மயக்கம் ஆகியப் பிரச்னைகளுடன் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் செப்டம்பர் 1 -ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. தொடர் சிகிச்சை பயனளிக்காமல் சிறுவன், செப்டம்பர் 5 -ஆம் தேதி மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து, அவரது உடலுறுப்புகளைத் தானமளிக்க அவரது பெற்றோர் முன்வந்தனர். இதயம், சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல் ஆகிய 6 உறுப்புகள் தானம் பெறப்பட்டன.
தானம் பெறப்பட்டதில் ஒரு சிறுநீரகம் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 46 வயது பெண்ணுக்குப் பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், இதயம் சென்னையில் உள்ள பிற மருத்துவமனைகளுக்கு தானமளிக்கப்பட்டன. கண்கள் அதே மருத்துவமனையின் கண் வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.