சுடச்சுட

    

    ’கர்ப்பப் பை வெளிப்புற திசுக்கள்: பெண்களுக்கு கருத்தரிப்பதில் பாதிப்பு'

    Published on : 05th February 2017 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்ப்பப் பையின் வெளிப்புறத்தில் வளரும் திசுக்களால் பெண்களுக்கு கருத்தரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது என்று நோவா செயற்கை கருவூட்டல் மையத்தின் கருத்தரிப்பு ஆலோசகர் டாக்டர் கிருத்திகா தேவி கூறினார்.
    சென்னையைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அத்துடன் அந்தப் பெண்ணுக்கு மாதவிடாய் காலத்தில் அடி வயிற்றிலும், இடுப்பிலும் கடுமையான வலி ஏற்பட்டு, ரத்தப்போக்கும் அதிகரித்து வந்துள்ளது.
    பரிசோதனையில் அவருக்கு கர்ப்பப்பையின் உட்புறத்தில் வளரும் திசுக்கள், வெளிப்புறத்தில் வளர்ந்து வந்ததால், அவர் கருத்தரிக்கவில்லை என்பது தெரியவந்தது.
    இதுகுறித்து கிருத்திகா தேவி கூறியது:
    என்டோமெட்ரியாசிஸ் என்று அழைக்கப்படும் இந்தப் பிரச்னையானது குழந்தையின்மை சிகிச்சைக்காக வரும் 10 சதவீத பெண்களுக்கு காணப்படுகிறது. அவர்களில் பெரும்பாலானோர் 29 வயது முதல் 35 வயது வரையுள்ளவர்கள். சென்னையைப் போன்ற நகரங்களில் வாழ்க்கை முறை மாற்றத்தின் காரணமாக இத்தகையப் பிரச்னைகள் 40 சதவீத பெண்களுக்கு ஏற்படுகின்றன. இந்தப் பிரச்னை முற்றிய நிலையில் பலர் மருத்துவமனைக்கு வருகின்றனர். இதன் காரணமாக கருப்பை வலுவிழந்து விடுகிறது.
    சிகிச்சை தாமதத்தால் அந்தத் திசுக்களானது கட்டிகளாக மாறி பெரியதாக வளர்ந்து விடும். இதனால் கட்டிகளை அகற்றுவதற்கு லாப்ரோஸ்கோப்பி, அறுவைச் சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் கர்ப்பப்பையின் வலிமை குறைந்துவிடும்.
    ஆரம்ப நிலையிலேயே இந்தப் பிரச்னைக்கு சிகிச்சை பெற்றால் கருவுறுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்ய முடியும் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai