Enable Javscript for better performance
'மிகவும் பின்தங்கிய நிலையில் புதிய மருந்து கண்டுபிடிப்பு, தயாரிப்புத் தொழில்நுட்பத் துறை'- Dinamani

சுடச்சுட

    

    'மிகவும் பின்தங்கிய நிலையில் புதிய மருந்து கண்டுபிடிப்பு, தயாரிப்புத் தொழில்நுட்பத் துறை'

    Published on : 09th February 2017 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dr

    எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச வேதியல், உயிரியல் மாநாட்டு கருத்தரங்க மலரை வெளியிட்ட (இடமிருந்து) பதிவாளர் என்.சேதுராமன், இணை துணை வேந்தர் டி.பி.கணேசன்,

    சர்வதேச அளவில் ஒப்பிடும்போது புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி, தயாரிப்பு தொழில்நுட்பத்துறையில் இந்தியா மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று இந்திய வேதியல், உயிரியல் ஆய்வுக்குழுமத் தலைவர் டாக்டர் அனாமிக் ஷா கூறினார்.
    சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் சர்வதேச வேதியல், உயிரியல் ஆய்வுக்குழுமம் சார்பில் புதன்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
    வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், சீனா,ஜப்பான் ஆகிய நாடுகளில் புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கான ஆராய்ச்சி, உயிர்காக்கும் புதிய மருந்து தயாரிப்புக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள், உதவி, ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
    இந்தியாவில் புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி நடவடிக்கையில் தொய்வு ஏற்பட்டு இருப்பதற்கு சீனா போன்ற நாடுகளிடம் இருந்து குறைந்த செலவில் மருந்து உற்பத்திக்கான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதும் முக்கிய காரணமாகும்.
    மருந்து தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுவரும் பெரும்பாலான நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களின் மருந்து பார்முலா, தொழில்நுட்ப உதவியை எதிர்நோக்கி உள்ள நிலையில் இங்கு புதிய மருந்து கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சி நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட வேண்டும். இந்திய அளவில் மருத்துவ சிகிச்சைத் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கி வரும் சென்னை, மருந்து தயாரிப்பு தொழில்நுட்பத் துறையிலும் விரைவில் சிறந்து விளங்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
    எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக நிறுவனர் வேந்தர் டி.ஆர். பாரிவேந்தர், இந்திய வேதியல், உயிரியல் ஆய்வுக்குழுமம் சார்பில் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்படும் மாநாட்டில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன்,பின்லாந்து, ஜெர்மனி, பெல்ஜியம், ஸ்வீடன் உள்ளிட்ட 20 வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், 30 இந்திய ஆராய்ச்சியாளர்கள் வழங்கும் ஆய்வுக் கருத்துரைகள் இந்திய மாணவர்களின் ஆய்வுத்திறனையும், அறிவாற்றலையும் மேம்படுத்தும் என்றார்.
    கருத்தரங்கில், சென்னை, தில்லி, ஜோத்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சித்துறை மாணவர்கள் பி.அன்பரசன், ரவிபிரகாஷ் சிங், அமித் மிஸ்ரா ஆகியோருக்கு இளம் விஞ்ஞானிகள் விருதும், அலிகார் பல்கலைக்கழக மாணவி பரூக் அஜ்மண்டுக்கு இளம் பெண் விஞ்ஞானி விருதும், திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.ஆர். தேசிய நிறுவன இயக்குனர் ஏ.அஜெய்கோஷ்க்கு சிறந்த விஞ்ஞானிக்கான விருதும், அவுரங்காபாத் அம்பேத்கர் பல்கலைக்கழக விஞ்ஞானி எம்.எஸ்.சிங்காருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai