சுடச்சுட

  

  முழங்கால் மூட்டு வலிக்கு ஸ்டெம் செல் சிகிச்சை அறிமுகம்

  By DIN  |   Published on : 10th February 2017 02:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  doc

  சென்னை டாஷ் எலும்பு மூட்டு சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் ஸ்டெம்செல் சிகிச்சை பெற்றவர்களுடன் (இடமிருந்து) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் எஸ்.எச்.ஜாகீர் உசேன்,

  இந்திய அளவில் முழங்கால் மூட்டு தேய்மானத்துக்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறையை முதன்முறையாக சென்னை டாஷ் மருத்துவமனையில் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதாக டாக்டர் ஜாஹிர் உசேன் தெரிவித்தார்.
  சென்னை டாஷ் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை சிறப்பு மருத்துவமனையின் சார்பில் ஸ்டெம் செல் உதவியுடன் குருத்தெலும்பை வளர்த்தெடுக்கும் ஆராய்ச்சிக்காக இங்கிலாந்து ராயல் மருத்துவக் கல்லூரியின் சார்பில் விருது பெற்ற லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த் ஷெட்டி, தென்கொரியா சியோலைச் சேர்ந்த டாக்டர் பீட்டர்கிம் ஆகியோருக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
  இந்த சிகிச்சை முறை குறித்து டாஷ் எலும்பு மூட்டு அறுவைச் சிகிச்சை சிறப்பு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் ஜாஹிர் உசேன் கூறியதாவது: முழங்கால் மூட்டு தேய்மானம் வயதானோர், இளம் வயதினருக்கு வரக்கூடியதாகும். இதற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சையே நிரந்தரத் தீர்வாக இருந்தது.
  இந்நிலையில் ஸ்டேம் செல் உதவியுடன் குருத்தெலும்பை வளர்த்தெடுக்கும் முயற்சியில் லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஆனந்த் ஷெட்டி, தென்கொரியா சியோல் நகரத்தைச் சேர்ந்த டாக்டர் பீட்டர்கிம் ஆராய்ச்சியை மேற்கொண்டதோடு, 300-க்கும் அதிகமான நோயாளிகளுக்கு சிகிச்சை செய்து முடிவையும் சமர்ப்பித்துள்ளனர். இதற்காக விருதும் பெற்றுள்ளனர்.
  முதல் முறையாக...: இந்தியாவில் முழங்கால் மூட்டு தேய்மானத்திற்கு ஸ்டெம் செல் சிகிச்சை முறையை முதன் முதலாக சென்னை டாஷ் மருத்துவமனை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்தது. இந்த நுண் துளை அறுவை சிகிச்சை முறையில் ஒரே நேரத்தில் செய்வதால் நோயாளி அடுத்த நாளே நடமாட முடியும்.
  ஒரு மணி நேர சிகிச்சை: இதில் மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சை போல முழங்கால்களின் எலும்பு பகுதிகள், சதைகள் எடுப்பதில்லை. உலோகம், செயற்கை பொருள்கள் பொருத்தப்படுவதில்லை. ரத்தமும் செலுத்தத் தேவையில்லை.
  ஒரு மணி நேர சிகிச்சைக்கு பின் நோயாளிகள் எப்போதும் போல் நடமாட முடியும். இதுவரையில் இந்த மருத்துவமனை கடந்த ஆண்டில் மட்டும் 7 பேருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார் அவர்.
  இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மயில்வாகனன் நடராஜன், டாக்டர் திருமால் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்..

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai