சுடச்சுட

    
    MANO

    ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ஸ்டெம்செல் மருத்துவக் கல்வி தொட ர் பயிலரங்கில் (இடமிருந்து) பேராசிரியர் குமார மாணிக்கவேல், முதல்வர் டி.ஆர்.குணசேகரன்,

    ஸ்டெம் செல் மருத்துவச் சிகிச்சை மூலம் ஆயுளை அதிகபட்சம் 30 ஆண்டுகள் அதிகரிக்க முடியும் என்று அமெரிக்க பசிபிக் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் மிரோஸ்லாவ் டோலர் கூறினார்.
    குரோம்பேட்டை ஸ்ரீ பாலாஜி மருத்துவக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஸ்டெம்செல் (குருத்தணு) மருத்துவச் சிகிச்சை முறை குறித்த தொடர் மருத்துவக் கல்வி பயிலரங்கில் அவர் மேலும் பேசியது:
    உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் தொழில்நுட்பத்திற்கு அடுத்தபடியாக, வளர்ச்சி பெற்றுவரும் தொழில்நுட்பமாக ஸ்டெம்செல் சிகிச்சைத் திகழ்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த சிகிச்சை முறை வியக்கத்தக்க வளர்ச்சி பெற்று வருகிறது.
    மனித உடலில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஸ்டெம்செல்களை நவீன தொழில்நுட்பம் மூலம் செலுத்தி, அந்த பகுதியில் திசு வளர்ச்சி ஏற்பட வைத்து நோய் பாதிப்பையும், குறைபாட்டையும் சரி செய்ய வாய்ப்புள்ளது.
    தற்போது எலும்பு மஜ்ஜை, தொப்புள்கொடி, ரத்தம், விழிவெண் படலம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் சர்க்கரை நோய், சிறுநீரகநோய், இதயநோய், முகத்தாடை, முதுகெலும்பு, தைராய்டு கோளாறு உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட நோய்களை வெவ்வேறு சிகிச்சை முறைகள் மூலம் குணமாக்க முடியும். அடுத்த 10 ஆண்டுகளில் உலகெங்கும் ஸ்டெம்செல் மருத்துவ சிகிச்சை தொழில்நுட்பங்களின் ஆளுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.
    இதைத்தொடர்ந்து, ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில் தொடங்கவிருக்கும் ஸ்டெம்செல் ஆராய்ச்சி, சிகிச்சைத் துறை குறித்து நடைபெற்ற கலந்தாய்வில், பசிபிக் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் டாக்டர் மிரோஸ்லாவ் டோலர், மரியா டோலோரோவா, பாரத் பல்கலைக்கழகக் கல்விக் குழுமத் தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன், துணைவேந்தர் டாக்டர் வி.கனகசபை, மருத்துவக் கல்லூரி கல்வி ஆலோசகர் ஆர்.வீரபாகு, முதல்வர் டி.ஆர்.குணசேகரன், துணை முதல்வர் பி.சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai