சுடச்சுட

  

  இந்திய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று இந்திய மருத்துவ சேவை அளிப்போர் சங்கத்தின் இயக்குநர் டாக்டர் கிரிதர் கியானி வலியுறுத்தினார்.
  இந்திய மருத்துவ சேவை அளிப்போர் சங்கத்தின் சார்பில் "மருத்துவச் சேவையின் எதிர்காலம்' என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு, சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் மருத்துவத் துறை வல்லுநர்கள் பலர் பங்கேற்றனர்.
  மாநாட்டில் டாக்டர் கிரிதர் கியானி பேசியது:
  தரமான மருத்துவ சேவை என்பது கட்டணத்தை சார்ந்துள்ளதால், நமது நாட்டில் இந்த சேவை கேள்விக்குறியாகவே உள்ளது. இதனால், பெரும்பாலும் மக்கள் தரமான, பாதுகாப்பான மருத்துவச் சேவையைக் காட்டிலும், குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளையே நாடுகின்றனர். இவ்வாறு இல்லாமல், அனைவருக்கும் குறைந்த கட்டணத்தில் தரமான சிகிச்சை கிடைக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவ நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்தியாவில் சிறந்த மருத்துவ சேவையை அளிக்க முடியும் இதனை சாத்தியமாக்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் தங்களது நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத் துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்க வேண்டும். மேலும், கிராமப்புறங்களில் மருத்துவமனைகளை அதிகரிப்பது, மருத்துவத் துறையை பிரத்யேகமாக கண்காணிப்பது ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். மாநாட்டில், சிறந்த சேவையை அளித்ததற்காக தமிழகத்தைச் சேர்ந்த 7 தனியார் மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai