சுடச்சுட

  

  சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில், வலிப்பு நோயாளிகளுக்கான ஆதரவு குழு திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
  மருத்துவமனையில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த வலிப்பு நோய் சிகிச்சை மையத்தின் சார்பில் இந்த ஆதரவுக் குழு தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள வலிப்பு நோயாளிகளுக்காக தொடங்கப்படும் முதல் ஆதரவுக் குழு இதுவாகும்.
  மருத்துவர்கள், வலிப்பு நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஆகியோரை ஒரே தளத்தில் இணைத்து நோயாளிகளுக்கான சிகிச்சை மட்டுமல்லாமல், அவர்களுக்குத் தேவையான ஆதரவையும் அளிக்கும் வகையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து வலிப்பு நோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் தினேஷ் நாயக் கூறியது: இந்தியாவில் சுமார் 1 கோடி பேருக்கு வலிப்பு நோய் பாதிப்பு உள்ளது. இவற்றில் 60 சதவீதத்தினர் மட்டுமே சிகிச்சைக்காக வருகின்றனர். நகர்ப்புறவாசிகளைக் காட்டிலும் கிராமத்தில் உள்ளவர்கள் குறைவான அளவிலேயே சிகிச்சை பெறுகின்றனர். கிராமப் பகுதிகளில் 20 முதல் 40 சதவீத வலிப்பு நோயாளிகளே சிகிச்சை பெறுகின்றனர். உரிய சிகிச்சையைப் பெறத் தவறுவது உரிய காலத்துக்கு முன்பே உயிரிழப்பை விளைவிக்கும். எனவே, நோயாளிகளுக்கு சிறப்பான கவனத்தையும், ஆதரவையும் அளிக்கும் வகையில் இந்தக் குழு தொடங்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai