சுடச்சுட

    

    சித்த மருத்துவ ஆராய்ச்சி: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலை. புதிய ஒப்பந்தம்

    Published on : 15th February 2017 02:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்த மருத்துவத் துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
    மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுவுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
    இந்த ஒப்பந்தத்தின்படி, பல்கலைக்கழகமும், மத்திய சித்த மருத்து ஆராய்ச்சிக் குழுவும் இணைந்து, கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பணிகளில் இணைந்து செயலாற்ற உள்ளது. மேலும் ஆராய்ச்சி மற்றும் ஆராய்ச்சி முறைகள் குறித்த பயிற்சி, பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவையும் நடைபெற உள்ளது.
    நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி பேசியது:
    பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் கல்வி உதவித்தொகையுடன் கூடிய சிறப்பு சித்த மருத்துவப் படிப்பு(fellowship) தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகியவற்றுக்கான படிப்புகளும் விரைவில் தொடங்கப்படும்.
    பல்கலைக்கழகத்தில் ரூ.1.69 கோடி செலவில் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் அடங்கிய மருத்துவமனை வளாகம் விரைவில் கட்டப்பட உள்ளது என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai