சுடச்சுட

  

  மாணவர்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

  Published on : 17th February 2017 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெருநகர சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோய்த் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடத்தப்பட்டன.
  இதுகுறித்து மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
  மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை சார்பில் கல்வி நிறுவனங்கள், குடிசைப்பகுதிகள் மற்றும் பொது இடங்களில் நோய்த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
  தற்போது தெருக்கூத்து நாடகம் மூலமாகவும், டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு சென்னை மாநகர் முழுவதும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
  இதன் ஒரு பகுதியாக, சென்னை நகர் முழுவதும் மண்டல சுகாதார அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களால் கோட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மொத்தம் 200 பள்ளிகளில் நோய்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
  இதில், முறையாக கைகளை சோப்பு போட்டு கழுவுவதன் மூலம் எவ்வாறு பெரும்பாலான தொற்று நோய்கள் வராமல் தடுக்க முடியும் என்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
  சிறப்பு நிகழ்வாக திரு.வி.க.நகர் மண்டலம், பெரம்பூர், பள்ளி சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 1500 மாணவிகளுக்கு சுகாதார கல்வி அலுவலரால் நோய்கள் எவ்வாறு உருவாகின்றன, அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
  சென்னை மாநகர் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பன்றிக் காய்ச்சல், கை கழுவும் முறைகள் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai