சுடச்சுட

  
  sidha

  ஸ்ரீசாய்ராம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிகளுடன் சாய்ராம் கல்விக் குழுமத் தலைவர் கலைச்செல்வி லியோமுத்து,

  சித்த மருத்துவத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல அனைத்து சித்த மருத்துவ நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும் என்று இந்திய மருத்துவக் கழகத்தின் முன்னாள் தலைவரும், கல்லூரி ஆய்வுத்துறை இயக்குநருமான வனிதா முரளிகுமார் கூறினார்.
  மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் மருத்துவக் கல்லூரியில் சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி ஆராய்ச்சி மையம் சார்பில் 10-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் பேசியது:
  சீனாவில் 100-க்கும் மேற்பட்ட சித்த மருந்துகள் போதிதர்மர் மருந்து என்ற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்விட்சர்லாந்து, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆங்கில மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்கள் ஆயுர்வேத மருத்துவக்கல்வி மற்றும் சிகிச்சைப் பயிற்சி பெற்றுச் செல்கின்றனர்.
  சித்த மருத்துவப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் தமிழ்மொழியில் படிக்க வேண்டிய நிலையில் உள்ளதால், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து பயிலும் வாய்ப்பு குறைவாக உள்ளது. சித்த மருத்துவம் பயின்ற மாணவர்கள் வெளி மாநிலங்களில் வேலைவாய்ப்புகள் இருந்தும் செல்லத் தயங்குகின்றனர். இந்நிலை மாற சித்த மருத்துவ நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது மிகவும் அவசியம் என்றார் அவர். விழாவில் 150 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai