சுடச்சுட

  

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்காக அடையாறு மருத்துவமனையில் பிரத்யேக பூங்கா

  Published on : 21st February 2017 02:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  gowdhami

  பூங்காவில் நடிகை கெளதமியுடன் குழந்தைகள்.

  புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கான பிரத்யேக பூங்கா சென்னை அடையாறு காந்தி நகரில் உள்ள புற்றுநோய் மருத்துவமனையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
  சென்னை மயிலாப்பூர் ரவுண்ட் டேபிள்-3, மயிலாப்பூர் லேடீஸ் சர்க்கிள் - 4 ஆகியன இணைந்து மருத்துவமனையின் பின்புறத்தில் ரூ.12 லட்சத்தில், 4 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கியுள்ளன.
  இங்கு குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், சுவர்களில் வண்ணமிகு ஓவியங்கள், உடல் நலத்துக்கு உகந்த நொச்சிச் செடிகள், பறவைக் கூடுகள் உள்ளிட்டவை உள்ளன.
  இதைத் திறந்துவைத்து நடிகை கௌதமி பேசியதாவது:-
  புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளது. மார்பகப் புற்றுநோய் குறித்து அறிந்து, 30 வயதியே சுய பரிசோதனை செய்ததால், ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிய முடிந்தது. புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து 10 ஆண்டுகள் கடந்த பின்னரும், அதுகுறித்து இப்போது பயப்படவில்லை என்றார்.
  விழாவில் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் இணை பேராசியர் விதுபாலா பேசுகையில், "புற்றுநோய் சிகிச்சையில் இருக்கும் குழந்தைகள் தொடர்ந்து மருத்துவமனையிலேயே தங்கி பல மாதங்கள் சிகிச்சை பெறும்போது மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற பூங்கா உருவாக்கப்பட்டதால், குழந்தைகள் தங்கள் சிகிச்சையின் வலிகளையும் மறந்து, விளையாட முடியும் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai