Enable Javscript for better performance
மண்ணிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் ருபெல்லா தடுப்பூசி முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மண்ணிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் ருபெல்லா தடுப்பூசி முகாம்

    Published on : 21st February 2017 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rupela

    சென்னை அருகே மண்ணிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் ருபெல்லா தடுப்பூசி போடும் முன் குழந்தைகளைப் பரிசோதிக்கும் அரசு மருத்துவர் எஸ்.வெங்கடேசன்.

    சென்னையை அடுத்த மண்ணிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் ருபெல்லா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை (பிப்.20) நடைபெற்றது.
    தட்டம்மை, ருபெல்லா நோயை முற்றிலும் ஒழிப்பதற்காக 10 மாதக் குழந்தைகள் முதல் 15 வயதுக்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடும் முகாம்கள் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார மையங்களில் முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
    மண்ணிவாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை படித்து வரும் 148 பள்ளி மாணவர்களுக்கும் அங்கன்வாடியில் 3 வயதுக்குள்பட்ட 20 குழந்தைகளுக்கும் ருபெல்லா தடுப்பூசி போடப்பட்டது.
    கூடுவாஞ்சேரி அரசு மருத்துவமனை மருத்துவர் எஸ்.வெங்கடேசன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் தடுப்பூசி முகாமில் பங்கேற்றனர்.
    தனியார் பள்ளிகள் தயக்கம்: ருபெல்லா தடுப்பூசி போடும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும், பள்ளி மாணவர்களும் ஆதரவளித்து வருகின்றனர். எனினும் ருபெல்லா தடுப்பூசி திட்டத்துக்கு தனியார் கல்வி நிறுவனங்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை.
    தடுப்பூசி போட்டு பள்ளிக் குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டால் வீண் பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடும் என பெரும்பாலான தனியார் பள்ளி நிறுவனங்களின் நிர்வாகிகள் பயப்படுகின்றனர்.
    பெற்றோர்களின் சம்மதத்துடன் அனுமதிக் கடிதம் கொண்டுவரும் குழந்தைகளுக்கு மட்டும் தடுப்பூசி போட அனுமதிக்கின்றனர். இதனால் தமிழக அரசின் ருபெல்லா தடுப்பூசி போடும் நடவடிக்கையில் சற்று தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.
    குழந்தைகளுக்கு ருபெல்லா தடுப்பூசி போடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர்களுக்குப் போதிய ஆலோசனைகள் வழங்கி விடுபட்ட குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட்டால்தான் நோயிலிருந்து பாதுகாப்பைப் பெற முடியும்.
    நோய் பரவுவதையும் தடுக்க முடியும். எனவே சுகாதாரத் துறை உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது அவசியம் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai