சுடச்சுட

    

    பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளுக்கு வைட்டமின் ஏ கிடைக்க இந்தச் சிறப்பு முகாமைப் பயன்படுத்துங்கள்!

    By DNS  |   Published on : 20th August 2018 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    baby-being-medicated-56443700-59bbff616f53ba00107ed082

    பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5 லட்சம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இது குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    பெருநகர சென்னை மாநகராட்சியின் மருத்துவ சேவைகள் துறையின்கீழ் உள்ள சென்னை ஆரம்ப சுகாதார மையங்கள், சென்னை மகப்பேறு மருத்துவமனைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட மையங்கள் ஆகியவற்றில் இந்த சிறப்பு முகாம், ஆகஸ்ட் 20 -ஆம் தேதி முதல் 25 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், சென்னையில் 6 மாதம் முதல் 5 வயது வரையுள்ள 5,73,252 குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கப்பட உள்ளது. இந்த முகாமை 6 மாதம் முதல் 5 வயது குழந்தைகள் கொண்டுள்ள தாய்மாா்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai