Enable Javscript for better performance
தொடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட- Dinamani

சுடச்சுட

    

    தொடையின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் உண்டாகும் வலியிலிருந்து விடுபட

    By கோவை பாலா  |   Published on : 24th October 2018 10:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    tired-man


    சத்துக்கள் : வைட்டமின்  B2, C, B6, தையமின், நியசின், மெக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், பொட்டாசியம், மங்கனீசு, கால்சியம், இரும்புச் சத்து, போலிக் ஆசிட், நார்ச் சத்து 

    தீர்வு : ஒரு இளம் பிஞ்சு கத்தரிக்காயை (வரியுள்ள, விதையுள்ள காய்) எடுத்துக் கொண்டு 10 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப் போட்டு பின்பு எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அதனுடன் முற்றின முருங்கை விதை (5), ஒரு எலுமிச்சம்பழத்தின் தோலை நறுக்கி போட்டு அதனுடன் தக்காளி (1), மிளகு(2), கொஞ்சம் மஞ்சள் தூள்,  தேவையெனில் உப்பு சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைத்து  ஜூஸாக்கி வடிகட்டி, காலை மாலை என இருவேளையும் குடித்து வரவும்.

    திப்பிலி (150 கிராம்), இஞ்சி (150 கிராம்) இரண்டையும் நன்றாக சிதைத்து அரை லிட்டர் கடுகு எண்ணெயில் போட்டு நீர் சுண்டும் வரை நன்கு காய்ச்சி வைத்துக் கொண்டு   தொடையின் வெளிபுறம் பூசி வரவும்.

    வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு : பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai