சுடச்சுட

  

  நீங்க சரியாகத் தான் மூச்சு விடறீங்களா? இதோ ஒரு செக் லிஸ்ட்!

  By கோவை பாலகிருஷ்ணன்   |   Published on : 03rd April 2019 12:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  nadi_suthi

   

  நேரம் காலம் தெரியாம கணினி முன் அமர்ந்து வேலை செய்யலாம். படிக்கலாம் அல்லது ஓய்வில் இருக்கலாம். என்ன செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அப்போது அல்லது எப்பவாவது மூச்சைக் கவனித்து இருக்கிறோமா?

  அதென்ன மூச்சைக் கவனித்தல்? 

  மூச்சைக் கவனித்தால் மனம் அடங்கும் என்கிற நுட்பங்களுக்குள் நாம் செல்ல வேண்டுமா? மேலோட்டமாக பார்த்தால் போதாதா.? போதும் . 

  மேலோட்டமாகவே பார்ப்போம். 

  நாம் உட்கார்ந்து செய்யக் கூடிய வேலை எதுவாயினும் உடல் பொதுவாக நிமிர்ந்த நிலையில் இருக்காது என்பதைக் கவனியுங்கள். 

  மூச்சு எண்ணிக்கை அல்லது மூச்சின் நீளம் குறையக் காரணம் பல இருந்தாலும் முக்கியமானது நேராக உட்காராமைதான்.

  மூச்சுக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். செத்தா போய்விடுவோம்?  

  உடல் அதற்குத் தேவையான அளவு மூச்சை எடுத்துக் கொள்ளத்தானே செய்யும் என்றால் ஆமாம். ஆனால் அந்த மூச்சு உயிரோடு இருக்கப் பயன்படுமே தவிர நம்மை உயிர்ப்போடு வைத்திருக்காது.

  மூச்சு இழுத்து விடுவதில் உடனடி பலனை ரத்தம் பெறுகிறது. ரத்தம் வளமானாலே நோய் என்பது உங்களை விட்டு தூர விலகிவிடும்.

  மூச்ச இழுன்னு சொன்னா நமக்குத் தெரிஞ்சதெல்லாம் டாக்டர் நெஞ்சுல ஸ்டெதஸ்கோப்ப வச்சுக்கிட்டு மூச்ச இழுக்கச் சொன்னதும், வயித்த எக்கி நெஞ்சுக் கூட்ட உயர்த்தி தம் கட்டி மூச்ச்ச இழுக்கறதுதான் தெரியும். இப்படி இழுக்கும்போது நுரையீரல் நிறைய காற்று நிரம்புவது போல் தெரிஞ்சாலும் உண்மையில் சற்றே அதிகம் இழுக்கிறோமே தவிர முழுமையாக காற்றை இழுப்பதில்லை.

  சரி மூச்சை சரியான விதத்தில் இழுப்பது எவ்வாறு? தபால்ல நீச்சல் பழகுவது போல இந்த இடுகையில், எழுத்தில், எப்படி மூச்சு விட்டுப் பழகுவது என்றூ கூறுகிறேன். முதலில் நிமிர்ந்து அமர்ந்து கொண்டு, கண்ணை மூடிக் கொண்டு, நுரையீரலில் காற்றை இழுப்பது என்பதற்கு பதிலாக, மூக்கின் வழியே காற்றை ஊற்றுவதைப் போன்ற உணர்வுடன் காற்றை மிக மெதுவாக இழுத்துப் பாருங்கள்.

  இதைச் சரியாகச் செய்கிறோமா என உறுதி படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்தானே, எவ்வாறு?...

  காற்று நுரையீரலின் கீழ்பகுதியில் நிறையும் போது அடிவயிற்றின் முன்புறங்கள் முன்னோக்கி வரும். 

  அடுத்து இயல்பாக நெஞ்சுக்கூடு, விலா எலும்புகள் விரிவடையும். மேலும் காற்று நிறைய நிறைய உடல் இன்னும் நிமிர்ந்து அடிவயிற்றின் கீழ்பாகம் சற்றே உள்நோக்கி நகரும். 

  இந்த நிலையில் காற்று இழுப்பது தானாக நின்றுவிடும். மிகச் சில நொடிகள் இயல்பாக தம் கட்டாமல் காற்றைப் பிடித்து வைத்துவிட்டு இயன்ற அளவு மெதுவாக மூச்சுக்காற்றினை வெளியேற்றவும்.

  வெளியேற்றும் போது அடிவயிற்றினை சற்று இறுக்கி காற்றை வெளியேற்ற வேண்டும் காற்று வெளியே போனதும் நெஞ்சினையும் அடிவயிற்றினையும் நன்கு தளர்த்தி விட்டுக் கொண்டு மறுபடியும் துவங்கவும்.

  இப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் செய்து வாருங்கள். 

  உணவு உண்டவுடன் மிதமாகச் செய்யுங்கள். கிடைக்கும் நன்மைகளை எனக்கு நீங்கள் பட்டியல் இடுவீர்கள்.

  *"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்"*

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai