66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு எப்படி வந்தேன்?

உடற்பயிற்சியுடன் டயட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டைச் சாப்பிட ஆரம்பித்தேன்.
66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு எப்படி வந்தேன்?

வலைதளத்திலிருந்து...

உடற்பயிற்சியுடன் டயட்டும் முக்கியம். மூன்று இட்லிகள் சாப்பிடும் நேரத்தில் இரண்டைச் சாப்பிட ஆரம்பித்தேன். இப்படி பாதி அளவு சாப்பாட்டை குறைத்தேன். ஆரம்ப காலங்களில் கஷ்டமாக தான் இருந்துச்சு. chocolates, pepsi, coke, ice cream, biscuits, snacks, முறுக்கு, மற்ற பலகாரங்களை முற்றிலும் தவிர்த்தேன். அந்த நேரங்களில் தான் வீட்டில் உள்ளவர்கள் kfc, macdonald’s, pizza, burger இப்படி ஏதாச்சு வாங்கி வருவார்கள். ஆனால், எதையும் தொட மாட்டேன். சில சமயங்களில் ஏக்கம் வரும்.

இவர்கள் வாங்கி கொண்டு வரும் நேரம் குறிப்பா இரவு நேரங்களில் தான் இருக்கும். ஏக்கத்தை தவிர்ப்பதற்காக நான் இரவு 7 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவேன். முழித்து இருந்தால், அவற்றை சாப்பிட்டு விடுவேனோ என்ற பயம். இரவு நேரங்களில் சாதம் சாப்பிடுவதை முற்றிலுமாகக் கைவிட்டேன். நாம் அதிகபடியாக சாதம் சாப்பிடுவதே நம் உடல் பருமனாக இருக்க காரணம். இரவு நேரங்களில், பழங்கள் அல்லது சப்பாத்தி என்று உணவுப் பழக்கம் மாறியது. சாப்பிடும்போது பாதி வயிறு நிரம்பும் வரை தான் சாப்பிட வேண்டும்.

பின்னர் aerobics, hip hop வகுப்புகளுக்கு சென்றேன். பயிற்றுவிப்பாளர் ஆடும்போது அது ஹிப்-ஹாப், அதே ஸ்டெப்புகளை நம்ம போடும்போது, ஏதோ டப்பாங்குத்து மாதிரி இருக்கும். ஆமா... சரியா ஆடி நாம என்ன பிரபுதேவா நிகழ்ச்சிக்கா போகப் போறோம். கை கால்களை அசைத்து, வேர்வை வெளியாகி, weight குறைப்பதே எனது நோக்கம்.

இப்படி செய்ய, 9 மாதங்களில் 66 கிலோவில் இருந்த நான் 53 கிலோவிற்கு வந்தேன். பெரிய... பெரிய சாதனை. பார்த்தவர்கள் நிறைய பேர், "ரொம்ப இளைச்சுட்டே' என்று சொல்லும்போது என்னுள் எழுந்த பெருமிதம் வானளவு!
http://enpoems.blogspot.com

முக நூலிலிருந்து....
சில ஓட்டல்களில் வடை சாப்பிடும்போது, 
அங்கு குழந்தைத் தொழிலாளர்களை
வேலைக்கு வைத்திருக்கிறார்களோ
என்கின்ற சந்தேகம் வருகிறது. 
பெரியவர்களால் வடையை 
அம்புட்டுச் சின்னதா சுட முடியுமா?
பெ. கருணாகரன்

• வெற்றியை விட பெருசா ஒன்னு இருக்குனா...
அது எதிரிகளுக்கு
நாம குடுக்குற நடுக்கம். 
ம.குமரவேல்

• தனிமை என்பது வலி 
என்று யார் சொன்னது?
தனிமை என்பது வழி...
நம்மைப் பற்றி நமக்கே புரிய வைக்கும் நிலை.
நட்பென்றால் நாம் என்போம்

• இறங்குகிற 
விழுதுகள் எல்லாமும்
ஊஞ்சல்களாய் போய்விடுகிற
சிக்கல்.
காற்று மழைக்கெல்லாம்
இன்னமும்
தளர்ந்து போன
வேர்களை நம்பியே
பிழைப்பை ஓட்டுகிறது...
வயதான-
ஆல்.
கண்மணி குணசேகரன்

சுட்டுரையிலிருந்து...
• விவசாய நிலங்கள் எல்லாம்... 
பாகம் பிரித்து கொண்டன,
ப்ளாட்டுக்களாக.
தனிமையின் காதலி 

• ஏழையா பொறந்துட்டா
காச மட்டும் இல்ல... 
ஆசையையும் சிக்கனப்படுத்தணும்.
மிஸ்டர் ஐடியா மணி

• முடி இழந்தவுடன்
சிம்மாசனத்தை விட்டு 
இறக்கிவிடுகின்றன
சலூன் கடை நாற்காலிகள்!
ச ப் பா ணி

• என்னதான் சிற்பி போல
செதுக்கி செதுக்கி வடிவமைத்தாலும்...
அது அதன் போக்கில் தான் செல்கிறது,
வாழ்க்கை.
சிவா. கார்த்திகேயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com