சுடச்சுட

  

  உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் குணமாக இதைச் செய்யுங்கள்!

  By கோவை பாலா  |   Published on : 05th February 2019 11:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  342436_8404921_magazine


  எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

  தேவையான பொருட்கள் :

  எலுமிச்சம் பழச் சாறு தோலோடு 
  (50 மி.லி)
  சீரகம் (200 கிராம்)
  கரும்புச் சாறு (50 மி.லி)
  முசுமுசுக்கைச் சாறு (50 மி.லி)
  நெல்லிக்காய்ச் சாறு (50 மி.லி)
  தூதுவளைச் சாறு (50 மி.லி)
  வேப்பம் பட்டைச் சாறு (50 மி.லி)
  தும்பை இலைச் சாறு (50 மி.லி)
  நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு  (100 கிராம்)

  செய்முறை : முதலில்  சீரகத்தை எடுத்து எலுமிச்சபழச் சாறில் ஊற வைத்து காய வைத்து பின்பு ஒன்றன் பின் ஒன்றாக மேற்கூறிய சாறுகளில் ஊற வைத்து பின்பு அதனை உலர்த்தி தூள் செய்து வைத்துக்கொண்டு இறுதியில் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்து வைத்துக்கொள்ளவும். இதனை தினமும் காலை மாலை என இருவேளையும் தலா ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து   சுடுநீரில் கலந்து குடித்து வந்தால் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் உயர் இரத்த அழுத்தம்  குணமாகும்.

  தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

  குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

  கோவை பாலா
  இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
  96557 58609 / Covaibala15@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai