ஃபேஷியல் காஸ்மடாலஜி என்றால் என்ன?

பேஸியல் காஸமட்டாலஜி என்றால் ,முக இயற்கை அழகு சம்பந்தப்பட்ட சிகிச்சை காஸ்மெட்டாலஜி ஆகும்
ஃபேஷியல் காஸ்மடாலஜி என்றால் என்ன?

1) ஃபேஷியல் காஸ்மடாலஜி என்றால் என்ன?

ஃபேஷியல் காஸமட்டாலஜி என்றால், முக இயற்கை அழகு சம்பந்தப்பட்ட சிகிச்சை ஆகும். இதில் சீரில்லாத முகரேகைகளை, சரியான விகிதத்தில் இல்லாத பல் அமைப்பினை, முகத்தில் ஏற்படக்கூடிய சுருக்கங்களை மற்றும் காயத்தால் ஏற்படும் வடுக்களை சீராக்க முடியும். இது சரும நோய்களைப் பற்றியது அல்ல, முக அமைப்பிற்கான சிகிச்சை மட்டுமே. இந்த சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் தோல் இளமையாகவும் அழகாகவும் அமையும்.

2) முக காஸ்மட்டாலஜியினால் ஏற்படும் மாற்றங்கள் என்ன? 

  • காயத்தால் ஏற்பட்ட வடுக்களை சரிப்படுத்தலாம்
  • முக கோடுகளை சரி செய்யலாம்
  • முக கருப்பு புள்ளிகள் நீக்கலாம்
  • பருக்கள் அகற்றலாம்
  • ஈறு மற்றும் உதடுகளில் கறை நீக்கலாம்
  • முகத்தில் மேடு பள்ளம் சீராக்கலாம்

இவை அனைத்தும் மைக்ரோ டெர்மா அப்ரேஷன் என்ற முறையில் சீர் செய்ய முடியும்.

3) மைக்ரோ-டெர்மா ஆபரேஷன் என்றால் என்ன?

மைக்ரோ டெர்மா ஆபரேஷன் முறை மூலம் பழைய தோலின் செல் அணுக்கள் நீக்கப்பட்டு புது செல் அணுக்கள் வளரும். இதனால் தோலில் பாதிப்பு ஏற்படாது.

4) போட்டாக்ஸ் என்றால் என்ன?

போட்டாக்ஸ் என்ற கருவியால் முகக் கோடுகள், சுருக்கம், கண் சார்ந்த வளையம் வயதுடன் கூடிய சுருக்கம் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்துவதாகும்.

5) நான் சிரிக்கும் போது ஈறுகள் தெரிகிறது என்ன செய்யலாம்?

ஈறுகள் தெரிகிறது என்றால்

1. ஈறுகளை போடாக்ஸ் போடுவது மூலம் மறைக்கலாம் உதடுகளை கனமாக்கி மறைக்கலாம். 2. கிளிப் போடலாம் 3. அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம் இவை மூன்றும் பல் மருத்துவர் எந்த வழியில் சரி செய்யலாம் என்று சில அளவுகோல்களை பார்த்து தேர்வு செய்து சரி செய்ய வேணடும்.

5) போடாக்ஸ் எத்தனை நாட்கள் நீடிக்கும்?

பொதுவாக 4 முதல் 5 மாதங்கள் போடாக்ஸ் செயல்படும்.

6) போடாக்ஸ் போட்ட உடனே பலன் தெரியுமா?

போடக்ஸ் போட்டு 2 முதல் 10 நாட்களில் பலன் தெரியும்.

7) வொயிட்டனிங் டிரீட்மென்ட் என்றால் என்ன?

குளுடதயான் என்ற மருந்தை இன்ஜெக்க்ஷனாக செலுத்தினால் முகம் சிகப்பாக மாற்றலாம்.

8) இரட்டை தாடை (double chin) எப்படி சரி செய்யலாம்.

டிஆகஸிகோஹாலிக் ஆசிட் எனும் ஊசியைப் போட்டு கொழுப்பை கறைக்க முடியும் இதன் மூலம், இரட்டை நாடி, அதாவது டபிள் சின் பிரச்னையை சரி செய்யலாம்.

9) கிளிப் போட சரியான வயது என்ன?

கிளிப் போட்டுக் கொள்ள ஈறுகள் ஆரோக்கியமாக இருந்தால் போதும் வயது ஒரு வரம்பு கிடையாது. சில பல் அமைப்புக்களுக்கு 7 வயதில் ஆரம்பிக்க வேண்டும்.

10) பல் சீரமைப்பதால் என்ன பலன் ?

பற்களை சீரமைப்பதன் மூலம் உச்சரிப்பு சீராகும், வாய் சார்ந்த மூட்டு TMJ சீராக வேலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும், மற்றும் பற்கள் தேய்மானம் குறையும், அழுகுபடுத்தல் மட்டும் அல்ல, அது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

11) முன் பற்களில் இடைவெளி இருக்கும் போது என்ன செய்ய வேண்டும்?

முதலில் சிறிய இடைவேளியாக இருந்தால் காம்போசிட் பேஸ்ட் என்ற மெட்டிரியல் பயன்படுத்தி இடைவெளியை சரியாக்கலாம், அல்லது கிளிப் போட்டு சிறிது காலம் எடுத்து சரி செய்யலாம். பல் மருத்துவர் ஆலோசனைபடி சிகிச்சை செய்ய வேண்டும்.

13) கிளிப் போட்டு கொண்டால் வெளியே மற்றவர்களுக்கு தெரியாமல் போட முடியுமா?

தற்போது அலைனர் என்ற ஒரு வித கிளிப் போட்டு வெளியே தெரியாமல் போட்டு சீர் செய்ய முடியும். அலைனர் போட்டுக் கொள்ள நாம் கவனத்துடன் பல் மருத்துவர் ஆலோசனைபடி செயல்பட வேண்டும்.

14) முக சிரமைப்புக்கு கிளிப் போட்டுக் கொள்வது அல்லது சர்ஜரி செய்து கொள்வது, எது நல்லது?

இந்த இரண்டுமே சில அளவுகோல்களை பொருத்து முடிவெடுப்பதால், பல் மருத்துவர் முடிவு செய்து உங்களுக்கு ஆலோசனை கூற வேண்டும்.

15) சர்ஜரி செய்து கொள்வது எப்படி பலன் தரும்?

முகச் சீரமைப்புக்கு முக்கியமான ஒன்று ஒரே நாளில் முக மாற்றம் ஏற்படுவதால், மிக சீக்கிரம் மாற்றம் ஏற்படும், ஆனால் சிலருக்கு கிளிப் போடுவதே சரியான சிகிச்சை. பல் மருத்துவர் உங்களுக்கு எது சரியானது என தேர்ந்தெடுக்க வேண்டும்.

- டாக்டர் ஆர்.சிவ பிரகாஷ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com