Enable Javscript for better performance
உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெற என்ன செய்யலாம்?- Dinamani

சுடச்சுட

    

    உடலிலுள்ள தேவையில்லாத கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெற என்ன செய்யலாம்?

    By கோவை பாலா  |   Published on : 09th January 2019 05:54 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Beauty-face-yoga-THS-655x353

     

    சத்துக்கள் : எலுமிச்சை பழத்தின் தோலில் விட்டமின் A, E, C, B6, ரிபோப்லாவின், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.

    தீர்வு :

    தேவையான பொருட்கள்.

    எலுமிச்சம் பழச் சாறு தோலோடு (50 மி.லி) ,பப்பாளி பழத் துண்டுகள் (100 கிராம்) , அன்னாசி பழத் துண்டுகள் (100 கிராம்) ,ஊறவைத்த வெந்தயம் (10 கிராம்) , தேன் (3டீஸ்பூன்) ,தண்ணீர் (100 மி.லி)

    செய்முறை

    பப்பாளி, அன்னாசிப் பழம், வெந்தயம் ஆகியவற்றை எலுமிச்சம் பழச்சாறு, தண்ணீர் இவற்றுடன் ஒன்றாக சேர்த்து அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து தேன் கலந்து மதிய உணவோடு சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கொழுப்பு கரைந்து இயல்பான உடல் எடையைப் பெறலாம்.

    தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

    குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

    கோவை பாலா
    இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
    96557 58609 / Covaibala15@gmail.com

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai