சுடச்சுட

  

  மணத்தக்காளி கீரையில் இத்தனை பலன்களா!

  By கோவை பாலகிருஷ்ணன்  |   Published on : 10th July 2019 11:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Manathakkali

  மணத்தக்காளி கீரைக்கு.. மணத்தக்காளி, மிளகுத்தக்காளி, சுக்குடிக்கீரை என்ற பெயர்கள் இருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.

  மணத்தக்காளி கீரையில் உள்ள சத்துக்கள்:

  புரதம் (5.9 சதவீதம்), 
  கொழுப்பு(1.0 சதவீதம்), 
  சுண்ணாம்பு(210 மி.கி), 
  பாஸ்பரஸ்(75 மி.கி), 
  இரும்புச்சத்து(20.5 மி.கி) ஆகிவையும், 

  மருத்துவ குணங்கள்:

  கிளைக்கோ ஆல்கலாய்டு (2.70 சதவீதம்), 
  டானின் (3.60 சதவீதம்), 
  சப்போனின்(9.10 சதவீதம்) 
  ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆக்டிவிட்டி(59.37 சதவீதம்) 
  என ஏராளமான தாது உப்புகளும், 
  உயிர் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன.

  இத்தனை சிறப்பான மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவதால்

  குடல்புண்
  நாக்குப்புண்
  வாய்ப்புண், 
  தொண்டைப்புண்  
  வாய் வேக்காடு 
  கபம், இருமல்  
  சளி, சலதோசம் 
  மூக்கடைப்பு, தும்மல்  
  காசம், சுவாசகாசம்  
  ரத்தகாசம்  
  இளைப்பிருமல் 
  இரைப்பிருமல் 
  இழுப்பிருமல் 

  இவையாவும் நீங்கும் என்கிறது பழந்தமிழ் நூலான பதார்த்த குணபாடம்.

  ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மூலிகை மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்ந்து ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்.....!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai